Buying gold on Akshaya Tritiya has become almost a habit over the last few years, Information about Purchasing Gold on Akshaya Tritiya 2022- அட்சய திருதியை, இந்து மற்றும் ஜெயின் சமூகத்தினர் இடையே மிகவும் புனிதமான நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது மிகவும் அதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுவதால், அனைத்து ஆன்மீக செயல்களும் இந்த நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்நாள் தங்கம் வாங்குவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு மே 3 அன்று அட்சய திருதியை வருகிறது.
வேத இலக்கியங்களின்படி, எந்த ஒரு நல்ல நாளையும் வலிமையை வளர்ப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும். இது வேதம் ஓதுதல், விசேஷ பூஜைகள் செய்தல், குலதெய்வத்தை வழிபடுதல், தொண்டு நிறுவனங்களுக்கு தானம் செய்தல், முன்னோர்களுக்கு காணிக்கை செலுத்துதல், மரங்களை நடுதல் மற்றும் நீர் பாய்ச்சுதல், ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல் போன்றவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த நாளில் இந்த செயல்களைச் செய்யும்போது, ஒருவர் தங்கள் கர்ம பலன்களை அடைய முடியும். இதன் விளைவாக, ஆன்மீக செழிப்பு மற்றும் பொருள் செழுமை இரண்டும் படிப்படியாக பெறலாம்.
பூஜை நேரங்கள்
த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, அட்சய திருதியை பூஜை முகூர்த்தம் மே 3 அன்று காலை 05:39 மணிக்கு தொடங்கி மதியம் 12:18 மணிக்கு முடிவடையும். திருதியை திதி மே 3 ஆம் தேதி காலை 5:18 மணிக்கு தொடங்கி மே 4 காலை 7:32 மணிக்கு முடிவடையும். மே 3 ஆம் தேதி காலை 05:39 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 05:38 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரம்.
கொண்டாட்டத்திற்கான காரணம்
புராணத்தின் படி, அட்சய திருதியை என்பது, குருகுலத்தில் ஒன்றாக வாழ்ந்து படித்த கிருஷ்ணர் மற்றும் அவரது குழந்தைப் பருவத்தில் நெருங்கிய நண்பரான சுதாமாவின் சிறிய கதை பற்றியது.
கிருஷ்ணரும், சுதாமாவும் ஒரு நாள் விறகு எடுக்க காட்டிற்கு சென்றனர். அப்போது மழை பெய்யத் தொடங்கியது, எனவே அவர்கள் ஒரு மரத்தின் பின்னால் தஞ்சம் அடைந்தனர். அப்போது அரிசி பொறி சாப்பிட்ட சுதாமா, கிருஷ்ணன் பசியாக இருப்பதாகக் கூறியபோது அவனுடன் அதை பகிர்ந்து கொண்டான்.
பிறகு, கிருஷ்ணர் ஒரு அரச குடும்பத்தில் பிறந்ததால் ஆட்சி செய்தார், அதே நேரத்தில் சுதாமா மோசமான வறுமையில் வாழ்ந்தார்.
ஒருநாள் சுதாமா கிருஷ்ணரை சந்திக்க முடிவு செய்துவிட்டு, கிருஷ்ணருக்கு வழங்குவதற்காக கைநிறைய அரிசியுடன் புறப்பட்டார். கிருஷ்ணர் தனது சிறந்த நண்பரைக் கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தார் மற்றும் அவருக்கு அரச உபசரிப்புகளை வழங்கினார்.
இந்த தாராள மனப்பான்மையால் மூழ்கிய சுதாமா, அவரிடம் எதையும் கேட்கத் துணியமால், அப்படியே வீட்டிற்குத் திரும்பினார், அவருடைய வீட்டில் பணம் மற்றும் செல்வம் நிறைந்திருப்பதைக் கண்டார்.
இப்படி அட்சய திருதியை கொண்டாட்டம் பகவான் கிருஷ்ணரின் நம்பிக்கை மற்றும் சுதாமாவுடனான நட்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் தனது பிறந்தநாளை அட்சய திருதியை அன்று கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.
முக்கியத்துவம்
இந்த நாளில், கடைக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இருவரும் நல்ல வர்த்தகத்திற்கு தயாராகிறார்கள். குறிப்பாக இந்துக்கள் மற்றும் ஜைனர்கள், அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் நம்பிக்கையில்’ தங்கத்தை வாங்குவதில் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் நாளைக் கழிக்கின்றனர்.
ஜைன மதத்தில் அட்சய திருதியை தினமானது, முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவ், தனது ஒரு வருட தவத்தை முடித்து, கரும்புச் சாற்றை தனது கைகளில் ஊற்றி அருந்தியதை நினைவுபடுத்துகிறது. ஆண்டு முழுவதும் விரதத்தின் மாற்று நாளான வர்ஷி-தப் பயிற்சி செய்பவர்கள், இந்த நாளில் கரும்புச் சாற்றைப் பருகி தபஸ்யாவை முடித்துக் கொள்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.