அட்சய திருதியை இன்று (ஏப்ரல் 22) தொடங்கி நாளை காலை 7.40 மணியளவில் முடிவடைகிறது. அட்சய திருதியை இந்து மற்றும் ஜெயின் மக்கள் கொண்டாடும் பண்டிகையாகும். இந்த நாள் வைஷாக மாதத்தின் பிரகாசமான ‘திதி’நன்நாளில் வருகிறது. இந்துக்களைப் பொறுத்தவரை, அக்ஷய திரிதியாவின் சமஸ்கிருத அர்த்தம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. "அக்ஷயா" என்றால் "எப்போதும் குறையாது" மற்றும் "திரிதியா" என்பது வைஷாக மாதத்தின் ஒளிரும் திதியின் மூன்றாம் நாளைக் குறிக்கிறது.
அட்சய திருதியை நன்நாளில் மக்கள் விரதம் இருந்து, கோயில் சென்று வழிபாடு செய்வர். அட்சய திருதியை என்பது செல்வம் பெருகும் நன்நாள் ஆகும். அதனால் பலரும் பொருட்கள் வாங்குவர், தானம் கொடுப்பர். குறிப்பாக தங்கம் வாங்குவர். அந்த வகையில் தங்க நகைகள் வாங்கும் போது முக்கியமான சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நல்ல நாளில் தங்கம் வாங்குவதன் முக்கியத்துவம் குறித்து ஸ்டார்கில் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பருனி வர்மா பேசுகையில், தங்கம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு விலைமதிப்பற்ற பொருள். அதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவு. செல்வத்தை பாதுகாக்க உதவும். இருப்பினும், சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
Purity
தங்க நகைகள் பொதுவாக மற்ற உலோகங்களுடன் நீடித்து நிலைத்திருக்கும், எனவே தங்கம் வாங்கும் முன் அதன் தூய்மை (Purity) சரிபார்ப்பது அவசியம். 24K (99.9 சதவிகிதம் தூய்மையானது), 22K (91.6 சதவிகிதம் தூய்மையானது) அல்லது 18K (75 சதவிகிதம் தூய்மையானது) போன்ற தங்கத்தின் தூய்மையின் அளவைக் குறிக்கும் அடையாளங்களை கண்டிப்பாக கவனித்து வாங்க வேண்டும்.
விலை
தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கலாம், எனவே வாங்குவதற்கு முன் தற்போதைய சந்தை விலைகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். வெவ்வேறு நகைக்கடைக்காரர்களின் விலைகளை ஒப்பிட்டு, நடைமுறையில் உள்ள சந்தை விலைகளின் அடிப்படையில் நியாயமான விலையில் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நம்பகத்தன்மை
போலி தங்க நகைகளில் ஏமாறாமல் இருக்க வேண்டும். நீங்கள் உண்மையான தங்கத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, எப்போதும் பிரபலமான நம்பிக்கையான கடைகளில் அரசிடம் உரிய அனுமதி சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து நகைகளை வாங்க வேண்மும்.
ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பாலிசிகள்
நகை வாங்கும் முன், நகைக்கடை வியாபாரியின் ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பாலிசிகளை சரிபார்க்கவும். ஏதேனும் சிக்கல்கள் காரணமாக நகைகளைத் திருப்பித் தரவோ அல்லது மாற்றவோ வேண்டுமானால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன்
தங்க நகைகளின் வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறனைக் கருத்தில் கொண்டு அது உங்கள் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யவும். எப்போதும் நல்ல ஃபினிஷிங், உறுதி தன்மை மற்றும் கற்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.