அட்சய திருதியை 2024: நாள், தேதி, சிறப்பு அம்சம் என்ன? மகாலட்சுமியை வழிபடுவது ஏன் முக்கியம்?

வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.

author-image
WebDesk
New Update
akshaya tritiya 2024

Akshaya tritiya 2024

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாள்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. அதிலும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது பிறையான அட்சயத் திருதியை மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Advertisment

அட்சயம் என்றால் பூரணமானது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். வளருதல்என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

அதனால் தான் அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வளரும் என்ற நோக்கில் தங்கத்தை மக்கள் வாங்குகின்றனர்.

ஆனால் அட்சய திருதியை அன்று, உப்பு வாங்கினாலே போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். மேலும் இல்லத்தில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை தேதி 2024

Advertisment
Advertisements

இந்த ஆண்டு அட்சய திருதி மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4:17 மணிக்கு திரிதியை திதி தொடங்கி, மே 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. உதயதிதியின் அடிப்படையில் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திதியை கொண்டாடப்படுகிறது.

மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.

மகாலட்சுமி வழிபாடு

அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட வேண்டும். அவர்களுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்னர் தூப, தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.

அன்றைய தினம்மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். இதனால் வீட்டில் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அட்சய திருதியை தினத்தன்று விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குவது விஷேசம்.

இப்படி எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்த அட்சய திருதியை நாளில் குலதெய்வ, இஷ்ட தெய்வங்களையும் வணங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: