Nancy Wartik, New York Times
மதுவே எனது மன அழுத்தத்தை குறைத்தது. உண்மையில் என்னை வாழ வைத்தது. எனக்கு செயற்கையான மகிழ்ச்சியை வழங்கியது. மதுவே என் வாழ்வின் அழிவை காப்பாற்றியது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
2018ம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் பழிவாங்கும் எண்ணத்துடனே நான் விழித்தேன். அதற்கு முதல் நாள் இரவு நான் என் அலுவலக நண்பர்களுடன் மது அருந்தினேன். அதில் ஒரு பெண்ணிடம் நான் நம்பி ஒப்படைத்த வேலையை அவள் செய்து முடிக்காமல் இருந்ததற்காக அவளிடம் சத்தமாக கத்தி காயப்படுத்தியிருந்தேன். உன்னிடம் நான் கூறியிருக்கக்கூடாது என்றபோது அவள் ஏதோ உளறினாள். மேலும் எனக்கு தெரியும், நான் ஒரு நம்பிக்கையை இழந்துவிட்டேன். சில இரவுகளுக்கு முன்னர் நான் பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளேன். ஒரு நண்பரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நண்பர்கள் நடத்திக்கொண்டிருந்தோம். கூட்டம் முடிந்த பின்னர் நான் நுரை பொங்கி வரும் மர்த்தினி என்ற மதுபானத்தை அருந்தியிருந்தேன். பின்னர் எங்கள் தொகுப்பாளினி மற்றும் இறந்தவரின் நெருங்கிய தோழியுடன் தேவையே இல்லாத ஒரு வம்பை இழுத்திருந்தேன். இப்போது அங்கு அமர்ந்து அதை செய்திருக்ககூடாது என்று தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறேன். மேலும் மது எனது வயிற்றையும் மோசமாக்கியிருந்தது. அடுத்த நாள் மீண்டும் அது ஒரு மோசமான காலை வேளை. நான் தலையணை உதவியுடன் என்னை தேற்றிக்கொண்டிருந்தேன்.
மதுவின் விளைவுகளை அறிந்துகொள்ள எனக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வில்லை. மது இரவை இனிமையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றுகிறது. அனைத்து விஷயங்களையும் நேசிக்கக்கூடியவளாக என்னை மாற்றுகிறது.
எதிர்பாராதவிதமாக என்னுள் அரக்க குணத்தைதூண்டி என்னை சண்டைக்காரியாகவும் மாற்றிவிடும். வலி மிகுந்த வாக்குவாதங்களை கட்டவிழ்த்து இக்கட்டான நிலையில் நம்மை தள்ளிவிடும். இன்று காலை மனதில் உதித்த ஒரு விஷயம், இதை நான் மீண்டும் ஒருமுறை செய்துவிடக்கூடாது. மதுவைவிட்டுவிட வேண்டும். மதுவுக்கும், எனக்குமான தொடர்பு ஆண்டுகளை கடந்ததாக இருப்பினும், என்னை மதுவுக்கு அடிமை என்று எண்ணியதில்லை. ஆன்லைன் வினாடிவினாக்களில் நாளொன்றுக்கு எத்தனை முறை மது அருந்துவேன் போன்ற கேள்விகளுக்குக்கூட மிக நேர்மையாக இரண்டு முறை என்ற பதிலை கூறமுடியும். மது அருந்துவது தொடர்பான பிரச்னைகள் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் வினாடிவினாக்களில் 40 புள்ளிகளுக்கு 8 பெற்று ஒரு நடுத்தர, ஆபத்தான நிலையில் வகைப்படுத்தக்கூடியவளாக இருந்துள்ளேன். நடுத்தர நிலை என்பது அவ்வளவு கெடுதல் கிடையாது. இணையதளம் என் குடிப்பழக்கத்தை மோசமான நிலைக்கு கொண்டுசெல்லாமல் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
கணவன், குழந்தை, மதிப்பான வேலை என்ற அழகான சூழ்நிலையும், என்னை பைத்தியமாக்காத நண்பர்களும் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம். சில நேரங்களில் நான் அதிகம் குடித்தேன். மதுவை பெரிதும் விரும்புபவராக என்னை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.
மதுவால் என்ன செய்யு முடியும் என்பதை தெரிந்துகொண்டபோது நான் பதின்பருவத்தின் இறுதியில் இருந்தேன். மது என் தடைகளை கடக்க உதவியது. தவறான நெருங்கிய உறவுகளுக்கு வழிவகுத்தது. அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்த தூண்டியது. தன்னம்பிக்கையற்ற நான் விரும்பியபடி, என்னை வெளிப்படையான நபராக மாற்றியிருந்தது. இயல்பாக எல்லோருடனும் பேசாத என்னை அனைவரிடமும் பேசுபவளாக மாற்றியிருந்தது. எப்போதாவது படுக்கையில் இருந்து எழுந்து அருகில் இருக்கும் தலையயைணையை பார்த்து வருத்தம் கொள்வேன். இவன் நேற்று இரவு ஏன் அவ்வளவு அழகாக தெரிந்தான் என்று? ஆனால் என் தோழிக்கு தொடர்புகொண்டு, நான் இந்த முறை என்ன செய்தேன் என்று கூறு? எனக்கேட்டு அந்த அசாதாரண சூழலை பெரும்மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்றிவிடுவேன் அல்லது என் தோழி மது விற்பவர் என்னை துரத்தியதை சாதனைபோல் கூறுவாள்.
மது ஒரு மருந்தும் கூட, என் மனக்கவலை, தனிமை ஆகியவற்றை போக்கிக்கொள்வதற்காக நான் மது அருந்தினேன். மதுவைப்பற்றி புரிந்துகொள்வதற்கு சில ஆண்டுகள் ஆனது. எனக்கு மன அழுத்தம் இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே நான் மது அருந்தினேன். மதுவே எனது மன அழுத்தத்தை குறைத்தது. உண்மையில் என்னை வாழ வைத்தது. எனக்கு செயற்கையான மகிழ்ச்சியை வழங்கியது. மதுவே என் வாழ்வின் அழிவை காப்பாற்றியது.
என் 40 வயதுகளில் என் வாழ்க்கை மாறியது. திருமணமானது. எனது கணவருடன் என் செல்ல மகளை தத்தெடுத்துக்கொண்டேன். அவருக்கு தற்போது வயது 17 ஆகிறது. வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறேன். உணவு சமைக்கிறேன். பக்கத்துவீட்டில் வசிக்கும் அம்மாவுடன் சேர்ந்து வைன் மட்டும் குடிக்கிறேன். எனது காலை வேளைகள் அவ்வளவு மோசமான தலைவலி நிறைந்ததாக இல்லை. இரவில் படிக்கிறேன் அல்லது கணவருடன் உரையாடுகிறேன். சில சமயங்களில் மனம் உடைந்தது. எனது மதுப்பழக்கம் எனது மூளை செல்களை அழிக்கும் என்று பயந்தேன். ஆண்களைவிட பெண்களுக்கு மது எவ்வளவு கேடு விளைக்கும் என்பது குறித்து எழுதினேன். அது எனக்கு கவலையளிப்பதாக இருந்தது.
எனக்கு கட்டுப்பாடு உள்ளது என்பதை நிருபிக்க சில ஆண்டுகளுக்கு முன், வாரத்தில் ஐந்து இரவுகள் மட்டுமே மதுவை எடுத்துக்கொண்டேன். அது மிக கடுமையாக இருந்தது. ஒரு கடினமான நாளுக்கு பின்னர் எப்படி என்னால் மது அருந்தாமல் இருக்க முடியும்? மது அருந்தாமல் தொடர்ச்சியான இரண்டு இரவுகளை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. வாரத்தில் தொடர்ச்சியான இரண்டு நாட்கள் மது அருந்தாமல் இருப்பது ராணுவ கட்டுப்பாடுபோல் தோன்றியது. எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் நான் நல்ல குணமுள்ளவளாக உணர்ந்தேன். மதுவுக்கு அடிமையானவர்கள், மது இன்றி ஒரு இரவைக்கூட கடக்க முடியாது. ஆனால், என்னால் முடியும் என்று நான் நம்பினேன்.
கடுமையான குடிப்பழக்கம் என்றால் என்ன? என்பதற்கு ஒரு தெளிவற்ற பதில்தான் கிடைக்கும்.
கடுமையான மதுப்பழக்கம் என்பது ஒரு நோயல்ல, அமெரிக்க மனநலம் மற்றும் மனநோய் கண்டறியும் சங்கம் இரண்டு விதமாக வரையறுக்கிறது. மதுவை தவறாக பயன்படுத்துவது மற்றும் மதுவை சார்ந்தே இருப்பது என்பதாகும். மேலும் அது 2013ம் ஆண்டில் இரண்டையும் இணைத்து மதுவை பயன்படுத்துவதால் ஏற்படும் கோளாறு (alcohol use disorder) என்று வரையறை செய்தது. ஒருவர் எவ்வளவு மது அருந்துகிறார் என்பதன் அடிப்படையில் அல்லாமல் 11 மனநல குறைபாடுகளில் எத்தனை குறைபாடுகள் மது பயன்படுத்தும் ஒருவருக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையில், குறைவான நிலை முதல் முற்றிய நிலை வரை என்ற அடிப்படையில் பிரித்தது. அதே நேரத்தில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு தனியான நிலைப்பாடு இருந்தது. அம்மையம் மது அருந்தும் அளவில் கவனம் செலுத்தியது. வாரத்தில் 7 முறை அல்லது அதற்கும் குறைவாக மது அருந்துவது பெண்களுக்கு பாதுகாப்பானது என்றும், 14 முறை அல்லது அதற்கும் குறைவான அளவு மது அருந்துவது ஆண்களுக்கு பாதுகாப்பானது என்றும் வரையறுத்தது. இந்த வரையறைகள் சர்வதேச அளவில் மாறக்கூடியவை. 2016ம் ஆண்டு முதல் ஸ்டான்போர்ட்டு பல்கலைகழகத்தின் அறிவுரைப்படி, கனடா மற்றும் பிரான்சில் வாரத்தில் அதைவிட அதிகளவு எடுத்துக்கொள்வது ஆபத்து குறைவானதாகவே கருதப்பட்டது. லான்சட் பத்திரிக்கை அண்மையில் நடத்திய ஆய்வில் மது உடல் நலத்திற்கு கேடு. அதில் பாதுகாப்பான அளவு என்பதே இல்லை என்று கூறியுள்ளது. சுருக்கமாக கூறினால், அதிகம் குடித்தும் நமக்கும் ஒன்றுமாகவில்லை என்று எண்ணினால், நீங்கள் நிச்சயம் வீரர்தான்.
வலியுடனும், அவமானத்துடனும் படுக்கையில் அமர்திருந்த அன்று என்ன ஆனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. உண்மையில் எதுவும் புரியவில்லை. ஏதோ பிரச்னையில் இருக்கிறேன் என்று மட்டும் தெரிந்தது. ஒரு பாட்டில் ஸ்காட்சை நான் மிக ஆவலுடன் தினமும் குடித்தால், மிதமான குடிகாரி ஆவேன். அதுபோதும் எனக்கு. இணையதளம் என் மது அருந்தும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியபோதும், மதுவை கைவிடுவது நான் ஒருபோதும் செய்திறாத கடுமையான விஷயமாக இருந்தது. நான் அதில் ஊறியிருந்தேன். உணவகங்களில் மதுகோப்பையை பார்க்கும்போது அமுதத்தை போலவே உணர்ந்தேன். உடற்பயிற்சிக்கு பின் பியர் குடிப்பதற்காக ஏங்குவேன். குடிக்காமல் வாழ்வதில் என்ன இருக்கிறது? முடிவாக, நான் குடிக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். மதுவுக்கு மாற்றாக போதை தராத பியர், சோடா போன்றவற்றிக்கு பழகிதான் மதுவை கைவிடவேண்டும். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பினாட் நாயர் போன்ற வைன் வகைகள் ஆரம்பத்தில் எவ்வளவு அச்சுறுத்தும் என தெரிந்துகொண்டேன். ஆச்சர்யப்படுத்தும் வகையில் எனது போதையற்ற மூளை அவர்களை கூறியதை விளையாட்டாக பார்த்ததுடன். ஒருவித ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
போதை மறுவாழ்வு மையங்களில் நான் சேரவில்லை. அதை நிராகரிக்கவும் இல்லை. எனது கணவர், மகள் மற்றும் நண்பர்களின் ஆதரவை தேடினேன். என்னை பார்த்து ஆச்சர்யமடைந்தார்கள். எனினும் எனக்கு சில பிரச்னைகள் இருந்தது. போதையில் இருந்து மீண்டவர்களின் கதைகளை கேட்டறிந்தேன். மது குடிப்பவர்கள் குறித்த படங்களை பார்த்தேன். சுயசரிதைகளை வாசித்தேன். மதுவில் இருந்து விடுபடுவது குறித்து மற்றவர்களின் பெயரில் ஒளிந்து பிறர் எழுதியதையும் வாசித்தேன். ஆனால் மது அருந்திய எனக்கும், மது அருந்தாத எனக்கும் உள்ள வித்யாசமே என்னை சரியான வழியில் நடக்கவைத்தது. என் வாழ்வில் இதுவரை நான் பெற்ற அளவில்லாத அவமானங்கள் அனைத்தும் விலகி, பெருமையாக உணர்ந்தேன். இதுவரை தவிர்த்து வந்த திருமணம், வேலை, குடும்பம், நண்பர்கள் என வாழ்க்கையை மாற்றிக்கொண்டேன். நான் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டதை அறியாத ஒருவர் என்னை சந்தித்தபோது, நான் இளமையாக தோற்றமளிப்பதாக கூறினார். நான் அதீத பொறுமைசாலியானேன். எனக்கு அடிக்கடி தலைவலி ஏற்படவில்லை. சக்தி வாய்ந்தவளாக உணர்ந்தேன். கனடா மருத்துவ சங்க பத்திரிக்கையின் ஆய்வில் கிடைத்த தகவலுடன் எனது முடிவுகளும் ஒத்திருந்தது. ஆராய்ச்சியாளர்கள் சமவயதுடைய ஹாங்காங் மற்றும் அமெரிக்கர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் பாதுகாப்பான மதுப்பழக்கம் உடையவர்கள், குறிப்பாக பெண்கள் மதுப்பழக்கத்தை நிறுத்திய பின் நன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. நான் மிதமான மது பழக்கம் உள்ளவளாக இருந்ததால், மதுவின் மீதான கட்டுப்பாடு குறைந்து நாள்பட்ட மீண்டும், மீண்டும் வரக்கூடிய மூளை நோயால் பாதிக்கப்பட்டேன். தேசிய மது ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி, 6.2 சதவீத வயது வந்த அமெரிக்கர்கள், 15 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் மது பயன்படுத்தும் கோளாறால் (alcohol use disorder) பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில ஆராய்ச்சிகள் இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
என்னைப்போன்றவர்கள் மிதமாக குடிப்பது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றே கருதுகின்றனர் என நினைக்கிறேன். நல்லவேளை மோசமான விளைவுகளை சந்திப்பதற்கு முன்னரே நான் மதுவில் இருந்து விலகியதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். மதுவைவிட்டு முற்றிலும் வெளியேறுவது இன்னும் சவாலாகவே உள்ளது. எல்லாமே திட்டப்படி நடந்தால், எனக்கும், உண்மைக்கும் இடையே உள்ள மெல்லிய திரை விலகாது. வைன் எனக்கு வடிகாலாக அமைந்துவிடும். மதுவிலிருந்து விடுபட்டும் மூன்றுமுறை அதை சுவைத்தது மிக வருத்தமான ஒன்றுதான். அண்மையில் கூட பெரு நாட்டின் பிரபலமான ஒருவகை மதுபானத்தை அங்கிருந்தேபோது அருந்தினேன். அது ஒருவித கிரக்கத்தை கொடுத்தது. அதற்கு பின்னர் ஒரு சொட்டு மதுவை கூட நான் சுவைக்கவில்லை. இப்போது நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறேன். ஒரு தாயாக, மனைவியாக, உறவினராக, தோழியாக இருக்கவே விரும்புகிறேன். அது நான்றாக இருக்கிறது. நாளை காலை எழுந்து மீண்டும் அதையே தொடர்வேன்.