பாலிவுட்டில் பிரபலமான ஆலியா பட்- ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண்குழந்தை பிறந்தது. இப்போது புதிய தாய் ஆலியா பட் தனது உடற்பயிற்சி பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 29 வயதான ஆலியாவின் ஒரு யோகா வகுப்பை பற்றி யோகா பயிற்சியாளர் அன்சுகா பர்வானி பகிர்ந்துள்ளார்.

தாய்மைக்குப் பிறகு முதன்முறையாக 108 சூரிய நமஸ்காரங்களை செய்ய முயற்சிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, இது சக்திவாய்ந்தது என்று ஆலியா கூறினார்.
ஒவ்வொரு நாளும் 108 சூரிய நமஸ்காரங்களை 30 நாட்களுக்குச் செய்த யோகா பயிற்சியாளர் அனிதா போக்பல்லி, சூரிய நமஸ்காரங்களுக்குப் பிறகு உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க “யோக் நித்ரா” செய்வது மிகவும் முக்கியம் என்றார்.
சூரிய நமஸ்காரம்
நிபுணர்களின் கூற்றுப்படி, 12-போஸ் வரிசை தூக்கப் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகிறது, தோரணையை மேம்படுத்துகிறது, தசையை மேம்படுத்துகிறது, மேலும் நெகிழ்வுத்தன்மை, இரத்த ஓட்டம், உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் அதிகப்படியான கொழுப்பை எரிக்கிறது.
இருப்பினும், இது சூரிய நமஸ்காரங்களைப் பயிற்சி செய்வது மற்றும் ஒவ்வொரு நாளிலும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி மட்டும் அல்ல. இது சுவாசம் மற்றும் ஓய்வெடுக்கும் பயிற்சிகளுடன் இணைக்கப்பட வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம், நன்றாக சாப்பிடுவதன் மூலம் மற்றும் ஓய்வெடுப்பதன் மூலம் உடலை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் தசைகளை கஷ்டப்படுத்தாமல் இலக்கை திறம்பட அடைய gentle stretching மற்றும் relaxing moves உடன் உடலை சூடேற்றுவதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
புதிதாகப் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது நல்லதா?
கர்ப்பம் மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய காலத்திற்கு, நாங்கள் எப்போதும் சூரிய நமஸ்காரங்களை மாற்றியமைக்கிறோம் என்று யோகா பயிற்சியாளர் இரா திரிவேதி கூறினார். நீங்கள் ஒரு வழக்கமான பயிற்சியாளராக இருந்தால், மென்மையான சூர்ய நமஸ்கர் மாற்றங்கள் உதவும். ஆனால் நீங்கள் முற்றிலும் புதியதாக இருந்தால், அதைத் தவிர்க்கவும். அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்காதீர்கள், என்று திரிவேதி கூறினார்.
இதன் பொருள் plank மற்றும் அஷ்வ சஞ்சலாசனம் தவிர்க்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
படங்காசனத்தில் (Padangusthasana) கைகளைக் கீழே கொண்டு வரும்போது கூட, கைகள் கால்களின் பக்கத்திற்கு எதிராக, கால்களுக்கு இடையில் இருக்க வேண்டும், இதனால் நீங்கள் கீழே வரும்போது நீங்கள் கிட்டத்தட்ட குந்திய நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கால்கள் அகலமாக இருக்கும். என்று திரிவேதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“