ஒரு ஹேங்கர், பழைய டி-சர்ட் போதும்… ஃபேன் க்ளீன் பண்றது ரொம்ப ஈஸிதான்!
உயரமாக இருக்கும் சீலிங் ஃபேன்களில் படிந்திருக்கும் தூசியைச் சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா? அன்றாட வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, ஸ்டூல் அல்லது ஏணி இல்லாமல், ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment
சீலிங் ஃபேன்களில் படிந்திருக்கும் தூசியைச் சுத்தம் செய்ய துணி ஹேங்கர் மற்றும் தலையணை உறை ஆகியவை தேவை. முதலில், ஒரு தலையணை உறையை எடுத்து உள் பக்கமாகத் திருப்புங்கள். பின்னர், ஹேங்கரை தலையணை உறைக்குள் சொருகி இறுக்கமாக வேண்டும். சுத்தம் செய்யும்போது அது நழுவி விழாமல் இருக்க, ஒரு வலுவான கயிறு அல்லது சணல் நூலைப் பயன்படுத்தி தலையணை உறையை ஹேங்கரின் இருபுறமும் இறுக்கமாகக் கட்டுங்கள். இப்போது, ஒரு மாப் ஸ்டிக்-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். மாப் ஸ்டிக்கின் முனையில் கொக்கி போன்ற இணைப்பு இருக்கும். ஹேங்கர்-தலையணை உறை கருவியை மாப் ஸ்டிக்கின் முனையில் கொக்கி போல மாட்டுங்கள். இது தரையில் இருந்தபடியே உயரமான ஃபேன்களையும் சுத்தம் செய்ய முடியும்.
தூசிப் படிந்திருக்கக்கூடிய உங்கள் ஃபேனை இப்போது, தலையணை உறை மூடிய ஹேங்கரை ஃபேன் பிளேடிலும் எளிதாகச் சொருகி தூசியை சுத்தம் செய்யலாம். மேல்புறத்தை மட்டுமல்லாமல், ஃபேன் பிளேடுகளின் அடிப்பகுதியையும் சுத்தம் செய்யலாம். இந்த டிப் மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு உதவ யாரும் இல்லாதபோது அல்லது உங்கள் சீலிங் மிக உயரமாக இருக்கும்போது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.