Advertisment

சொந்தமாக கேரவன், கோடிகளில் சொகுசு வாகனம்: புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூன் கார் கலெக்ஷன்ஸ்

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூனின் கார் கலெக்ஷன்ஸ் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Allu Arjuns car collection Rolls-Royce to Vanity van

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்

புஷ்பா படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் அல்லு அர்ஜூன். இவரின் நடிப்பில் முந்தைய படங்களான ஆர்யா, தேசமுதுரு, பன்னி, ரேஸ் குர்ரம் உள்ளிட்ட படங்களும் அவருக்கு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றுக்கொடுத்தன.

Advertisment

இவர் மிகச்சிறந்த நடன கலைஞராகவும் அறியப்படுகிறார். இவரிடம் விலை உயர்ந்த தனித்துவமான கார்கள் உள்ளன. அது பற்றி பார்க்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்

ரூ.6.95 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை அல்லு அர்ஜூன் வைத்துள்ளார். இந்தக் கார் பற்றி அறிமுகம் தேவையில்லை. இது, 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் இயக்குகிறது.

ஹம்மர் H2

அல்லு அர்ஜுன் கிளாசிக் கருப்பு ஹம்மர் H2 கார் வைத்திருக்கிறார். H2 ஆனது பல்வேறு எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் கலவைகளால் இயக்கப்படுகிறது, இருப்பினும், அவர் வைத்திருக்கும் சரியான மாடல் தெரியவில்லை.

ஜாகுவார் எக்ஸ்ஜேஎல்

நடிகரின் கேரேஜில் அடுத்த சொகுசு கார் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் ஆகும். இதன் மதிப்பு ரூ.1 கோடி எனத் தெரியவருகிறது.

ரேஞ்ச் ரோவர் வோக்

ரேஞ்ச் ரோவர் இல்லாமல் எந்த பட்டியலும் முழுமையடையாது. அல்லு வோக் வைத்துள்ளார். இது ரூ. 1.78 கோடி மதிப்புடையது.

Volvo XC90 T8 எக்ஸலன்ஸ்

அல்லு அர்ஜூன் வைத்திருக்கும் Volvo XC90 T8 எக்ஸலன்ஸ் காரின மாடல் சரியாக தெரியவில்லை. இது 2015 முதல் 2021க்குள் விற்பனையில் இருக்கும் மாடல் ஆகும்.

‘பால்கன்’ வேனிட்டி வேன்

அல்லு அர்ஜுனின் கார் கலெக்ஷனில் ஒரு ஆஃப்-பீட் வாகனப் பகுதி ஃபால்கன் என்று பெயரிடப்பட்ட வேனிட்டி வேன் ஆகும். இதன் மதிப்பு ரூ. 7 கோடி என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் அதன் எஞ்சின் மற்றும் செயல்திறன் பற்றிய அதிக விவரங்கள் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Allu Arjun Telugu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment