பளபளக்கும் சருமத்துக்கு, இருக்கவே இருக்கு பாதாம் ஃபேஸ் பேக்

தூங்கப் போவதற்கு முன் ரோஸ் வாட்டரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்கள்.

Almond Face Pack
Almond Face Pack

Almond Face Pack: விட்டமின் ஈ நிறைந்த பாதாம், உங்களின் சருமத்தை வறண்டு போகாமலும் சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் பாதாமில் உள்ள ஆஸிட்டிஸ், விட்டமின் ஈ ,மக்னீசியம் புரதச்சத்து மற்றும் ஃபேட் ஆகியவை ஒருவருடைய உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்ய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை கவனியுங்கள்.

பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க்

1.டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால்

2 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர்

மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவி விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்

1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ்

2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்

3 டேபிள்ஸ்பூன் பாதாம்

அரைத்த ஓட்ஸ், காய்ச்சாத பால், பாதாம் ஆகியவற்றை கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்கப் போவதற்கு முன் ரோஸ் வாட்டரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்கள். இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள் முகம் பிரகாசிக்கும்

பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்

1. டேபிள்ஸ்பூன் கடலை மாவு

2..டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்

3.டேபிள்ஸ்பூன் மஞ்சள்

ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட பொருட்களை போட்டு அதில் ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Almond face pack face mask skin brightness

Next Story
பற்கள் முத்துபோல் பளிச்சிட கடுகு எண்ணெய்Mustard,oil,teeth,clean,tooth decay, tooth ache, tooth problem
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X