பாதாம் மரத்திலிருந்து பெறப்படும் பாதாம் பிசின், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. பாதாம் பிசினில் துத்தநாகச் சத்து மிக அதிகம் என்பதால் ஆண், பெண் இருவருக்குமே மிகவும் நல்லது.
பாதாம் பிசினில் 92.3 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸ், 2.4 விழுக்காடு புரதம் மற்றும் 0.8 விழுக்காடு கொழுப்பு நிறைந்திருக்கிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன.
எந்த வயதினரும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளைப்படுதல் பல பெண்களும் சந்திக்கிற ஒரு பிரச்னை. தினமும் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை சாப்பிட்டு வர, இந்தப் பிரச்னை சரியாகும்.
கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக கோடைக் காலத்தில் மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பாதாம் பிசினை ஊற வைத்துக் கொடுக்கலாம். பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதிலும் பாதாம் பிசின் உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் யூரினரி இன்ஃபெக்ஷன் பிரச்னையையும் இது சரி செய்யும். சிறுநீரகத்தில் வருகிற கற்கள், சிறுநீர்ப் பாதையில் வளர்கிற சதை இரண்டையும் இந்தப் பிசின் கரைக்கும்.
எப்படிச் சாப்பிடுவது?
5 கிராம் பாதாம் பிசினை எடுத்து சுத்தப்படுத்தி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிடுங்கள். காலையில் அதை அப்படியே சாப்பிடலாம். தண்ணீரில் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். பழச்சாறுகளுடன் கலந்து சாப்பிடலாம். நன்னாரி சர்பத்தில், இளநீரில் போட்டும் குடிக்கலாம்.
இது சுலபமாக ஜீரணிக்கக்கூடியது என்பதால், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்கூட சாப்பிடலாம். எந்தப் பக்க விளைவுகளும் வராது.
குறிப்பு: இதில் உயிர் சத்துகள் அதிகம் என்பதால் தினமும் 5 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“