பாதாம் பருப்பு இந்திய சமையலில் இன்றியமையாதது. நீங்கள் அவற்றை இனிப்புகளில் டாப்பிங்ஸாகப் பயன்படுத்தலாம், கெட்டியான கிரேவிக்கு அதன் பேஸ்டை பயன்படுத்தலாம்.
Advertisment
நிறைய பேர் பச்சை பாதாமை சாப்பிட விரும்புகிறார்கள், ஏனெனில் பச்சையாக பாதாம் சாப்பிடுவது நினைவாற்றலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பச்சையான பாதாம் பருப்புகளை அவற்றின் தோலை உரித்த பிறகுசாப்பிடுவது நல்லது. அதன் தோலில் டானின் எனும் கலவை உள்ளது, இது உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது.
தோலுரிக்கும் போது, பாதாம் அனைத்து ஊட்டச் சத்துக்களையும் எளிதாக வெளியிட அனுமதிக்கிறது.இருப்பினும் ஊற வைத்த பாதாம், பெரும்பாலும் பச்சையானவற்றை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
Advertisment
Advertisement
ஆனால், பாதாமில் இருந்து தோலை உரிப்பது என்பது மிகவும் கடினமான பிரச்னை.
பாதாம் தோலை உரிக்க மிக எளிதான ஹேக் எங்களிடம் உள்ளது.
எளிதாக தோலுரிப்பது எப்படி?
ஒரு கிண்ணத்தில் சூடான நீரை எடுத்து, அதில் பாதாம் பருப்புகளை போடவும். சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
பிறகு, பாதாம் பருப்பை எடுத்து குளிர்ந்த நீரில் ஒரு பாத்திரத்தில் மாற்றவும். ஆறியதும், தண்ணீரை வடிகட்டிதுணியைப் பயன்படுத்தி பாதாமை உலர வைக்கவும்.
இப்போது, உங்கள் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் பாதாமை வைத்து சிறிது அழுத்தவும். இப்போது தோல் சுருங்கி, எளிதாக வருவதைக் காண்பீர்கள்.
என்ன இந்த ஹேக் எளிதாக இருக்கிறதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“