குளிக்கிற தண்ணீரில் சில சொட்டு இந்த எண்ணெய்... ஒருமுறை ட்ரை பண்ணுங்க!
பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது சரும திசுக்களை சரிசெய்யவும், சரும ஈரப்பதத்தை தக்கவைக்கவும், புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
குளிர் காலத்தில் சருமத்தைப் பராமரிக்க உதவும் ஏதேனும் தீர்வு உள்ளதா? ஆம், இருக்கிறது, அது ஒரு மந்திரம் போல வேலை செய்கிறது!
Advertisment
குளிர் காலத்தில் சூடான குளியல் நல்லது, ஆனால் அவை உங்கள் சருமத்தை உலர்த்தும். நீங்கள் குளிக்கும் நீரில் பாதாம் எண்ணெயைக் கலந்தால், ஆழமான ஈரப்பதமூட்டும் அனுபவத்தைத் தருகிறது, என்று தோல் மருத்துவர் அக்ரிதி குப்தா கூறினார், அவர் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகளை விளக்கினார்.
பாதாம் எண்ணெய் எவ்வாறு உதவுகிறது?
இனிப்பு பாதாம் எண்ணெயை மாய்ஸ்சரைசர்(Sweet almond oil), அல்லது ஐ மேக்கப் ரிமூவர் அல்லது உடல், கை மற்றும் தலை மசாஜ் செய்ய போன்ற பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம். இனிப்பு பாதாம் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறனுக்கு உதவுகின்றன, அதே நேரத்தில் அதன் வைட்டமின் ஈ உள்ளடக்கம் வறட்சியால் ஏற்படும் வீக்கத்தை அமைதிப்படுத்துகிறது.
எண்ணெயின் துத்தநாகச் செறிவு கரடுமுரடான, தோலைக் குறைக்க உதவுகிறது. எனவே, பாதாம் எண்ணெய் அரிக்கும் தோலழற்சி(eczema) மற்றும் சொரியாசிஸ் போன்ற வறண்ட சருமத்தால் ஏற்படும் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இது நச்சுத்தன்மையற்றது மற்றும் எரிச்சல் ஏற்படுத்தாதது என்பதை ஒப்புக்கொண்ட தோல் மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத் கூறுகையில், இது மேற்பரப்பில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. தோல் மற்றும் ஈரப்பதத்தை உள்ளே வைக்கிறது என்றார்.
பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது சரும திசுக்களை சரிசெய்யவும், சரும ஈரப்பதத்தை தக்கவைக்கவும், புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது என்று உணவியல் நிபுணர் டோலி பாலியன் கூறினார்.
குளிக்கும் தண்ணீரில் இரண்டு சொட்டுகள் பாதாம் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.
அதைப் பயன்படுத்துவதற்கான பிற வழிகள்
* இதை காலையில் குளித்த பின் சற்று ஈரமான தோலில் அல்லது தூங்கும் போது கை, கால்கள், கழுத்தில் தடவவும். வறண்ட சருமம் இருந்தால், முகத்தில் கூட தடவலாம்.
* தோலில் மெதுவாக மசாஜ் செய்யலாம். இது ஒரு நல்ல நகம் மற்றும் க்யூட்டிகல் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தூங்கும் போது நகத்தில் சில துளிகள் தடவினால் போதும்.
*இதை சர்க்கரை அல்லது ஓட்ஸுடன் கலந்து ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தலாம்.
*உலர்ந்த உதடுகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கான குறிப்புகள்
ஆரோக்கியமான சர்க்கரை இல்லாத உணவு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி, தோல் பராமரிப்பு ஆகிய நல்ல பழக்கங்களை கடைபிடிப்பது மற்றும் மன அழுத்தம், ஆல்கஹால், நிகோடின் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்ல ஆரோக்கியமான சருமத்தை ஏற்படுத்தும் என்று டாக்டர் ஜெய்ஸ்ரீ கூறினார்.
பகலில் சருமத்தை கழுவது, மாய்ஸ்சரைசர் போடுவது மற்றும் சன்ஸ்கிரீன் மூலம் சருமத்தை பாதுகாப்பது ஆகியவை தினசரி கட்டாயம் செய்ய வேண்டும். அதேபோல இரவில், முகத்தை கழுவி, சீரம் மற்றும் ஒரு மாய்ஸ்சரைசரைத் தொடர்ந்து அண்டர் ஐ கிரீம் தடவ வேண்டும்.
உங்கள் தோல் மருத்துவர் பரிந்துரைத்தபடி மற்ற எல்லா சீரம் அல்லது கிரீம்களையும் நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் உங்கள் சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசரை மறந்துவிடாதீர்கள், என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“