வீட்டில் நீங்களே செய்யக்கூடிய ஃபேஸ் பேக்கில் கற்றாழை ஜெல் இருப்பது சிறந்தது. ஆனால், இது ஒரு கேள்வியையும் எழுப்புகிறது:
கற்றாழை வெண்ணெய் என்றால் என்ன?
Advertisment
Advertisements
நீங்கள் இதைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தால் அல்லது அதைப் பயன்படுத்தியிருந்தால், சிறந்தது. ஆனால், அறிமுகமில்லாதவர்களுக்கு இதை, எந்த நேரத்திலும் வீட்டிலேயே செய்யலாம்; படிக்கவும்.
கற்றாழை ஜெல், ஷியா வெண்ணெய்யுடன் சேர்க்கும் போது, கற்றாழை வெண்ணெய் தயாராகிறது, இது ஒரு சிறந்த தோல் பராமரிப்பு மூலப்பொருளாகும்.
இது உங்கள் சருமம் மற்றும் முடி இரண்டையும் அழகாக்குகிறது, முகத்தில் உள்ள கருவளையங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குகிறது மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை குணப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
இது சில அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் முன்கூட்டிய வயதானது உட்பட தோல் சேதத்தைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
கற்றாழை வெண்ணெயை, இயற்கையான கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும் - வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
*கற்றாழை வெண்ணெய் செய்ய, உங்களுக்கு சிறிது ஷியா வெண்ணெய் மற்றும் தோராயமாக மூன்று தேக்கரண்டி கற்றாழை ஜெல் தேவைப்படும்.
* இரண்டையும் சேர்த்து, பேஸ்ட்சீரானதாக மாறும் வரை தொடர்ந்து கலக்கவும்.
நீங்கள் முடித்ததும், அதை ஒரு சிறிய ஜாடியில் வைக்கவும், குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
*சேமிப்பு ஆயுளை அதிகரிக்க, நீங்கள் அதில் சில ரெடிமேட் கற்றாழை ஜெல்லையும் சேர்க்கலாம்.
பயன்கள்
* உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன், அதை உச்சந்தலையில், இழைகள் வரை தடவி, 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஹேர் மாஸ்க் போல் விடவும்.
* முகத்தை மென்மையாக்க மாய்ஸ்சரைசராக பயன்படுத்தவும். உங்கள் உதடுகளின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், அவற்றில் சிலவற்றைப் பயன்படுத்தலாம்.
* கருவளையங்கள் மற்றும் மெல்லிய கோடுகளைப் போக்க, கண்களுக்குக் கீழே சிறிது அளவு தடவவும்.
நீங்கள் அதை தோலில் பயன்படுத்துவதற்கு முன், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“