கிளியோபாட்ரா அழகுக்கு காரணம் இதுதான்... நம்மூர் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் டெய்சி

இந்த அற்புத இளமையைத் தக்கவைக்கும் உணவுகளில் மூன்றையாவது தேர்வு செய்து 30 அல்லது 48 நாட்களுக்குத் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள்.

இந்த அற்புத இளமையைத் தக்கவைக்கும் உணவுகளில் மூன்றையாவது தேர்வு செய்து 30 அல்லது 48 நாட்களுக்குத் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Dr Daisy skin care

Dr Daisy skin care

வயதாவதைத் தடுக்க யாருக்குத்தான் விருப்பமிருக்காது? காலம் முன்னோக்கிச் செல்லும்போது முதுமை தவிர்க்க முடியாதது என்றாலும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் முதுமை அறிகுறிகளைக் குறைத்து, இளமையாகவும் உற்சாகமாகவும் இருக்க முடியும். "இளமையைத் தக்கவைக்க முடியுமா?" என்ற கேள்விக்கு "நிச்சயமாக!" என்பதே பதில். உங்கள் சமையலறையிலேயே முதுமையைத் தடுக்கும் மாமருந்துகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

Advertisment

முதுமை ஏன் ஏற்படுகிறது?

நம் உடல் செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால், காலப்போக்கில் செல் சேதம், ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகள், மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாக இந்த செயல்முறை மெதுவாகிறது. இதன் விளைவாக சரும சுருக்கங்கள், மந்தமான சருமம், ஆற்றல் குறைதல் போன்ற முதுமை அறிகுறிகள் தோன்றுகின்றன. இதைத் தடுக்க, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் நமக்குத் தேவை.

உலக அழகி கிளியோபாட்ராவின் அழகின் ரகசியம் சோற்றுக் கற்றாழைதான். வெளிப்பூச்சு மட்டுமல்லாமல், உள்ளுக்குள்ளும் இதை உட்கொள்வது சிறந்தது. தோல் சீவி, ஏழு முறை கழுவிவிட்டு, அதனுள் மிளகு, கல்லுப்பு வைத்து சாப்பிடலாம். அல்லது மோருடன், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஜூஸாக அரைத்தும் அருந்தலாம், என்கிறார் டாக்டர் டெய்சி. 

Advertisment
Advertisements

எப்போதும் இளமையாக இருக்க அவர் பரிந்துரைக்கும் 10 உணவுகள் இங்கே.

இந்த அற்புத இளமையைத் தக்கவைக்கும் உணவுகளில் மூன்றையாவது தேர்வு செய்து 30 அல்லது 48 நாட்களுக்குத் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக, காலை உணவாக சமைத்த உணவுகளைத் தவிர்த்து, பயறு வகைகளை எடுத்துக் கொள்வது மூட்டு வலி, மூலநோய், சருமப் பிரச்சனைகள் போன்றவற்றை நீக்கி, உங்களுக்கு ஆரோக்கியத்தையும் இளமையையும் தரும், என்கிறார் டாக்டர் டெய்சி. 

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: