கிளியோபாட்ரா அழகு காரணம் இதுதான்… அடிக்கடி இப்படி சாப்பிடுங்க; டாக்டர் டெய்சி
இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் அற்புதமான நன்மைகளைத் தருகின்றன. தினமும் கற்றாழையைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் இயற்கையான அழகை பெற முடியும்.
இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் அற்புதமான நன்மைகளைத் தருகின்றன. தினமும் கற்றாழையைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் இயற்கையான அழகை பெற முடியும்.
கற்றாழை, பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ மற்றும் அழகு நன்மைகளுக்காக அறியப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் அற்புதமான நன்மைகளைத் தருகின்றன. தினமும் கற்றாழையைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் இயற்கையான அழகை பெற முடியும்.
இவ்வளவு ஏன்? உலக அழகி கிளியோபாட்ராவின் அழகின் ரகசியம் சோற்றுக் கற்றாழைதான். வெளிப்பூச்சு மட்டுமல்லாமல், உள்ளுக்குள்ளும் இதை உட்கொள்வது சிறந்தது. தோல் சீவி, ஏழு முறை கழுவிவிட்டு, அதனுள் மிளகு, கல்லுப்பு வைத்து சாப்பிடலாம். அல்லது மோருடன், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஜூஸாக அரைத்தும் அருந்தலாம், என்கிறார் டாக்டர் டெய்சி.
Advertisment
எப்போதும் இளமையாக இருக்க அவர் பரிந்துரைக்கும் 10 உணவுகள் இங்கே.
இந்த அற்புத இளமையைத் தக்கவைக்கும் உணவுகளில் மூன்றையாவது தேர்வு செய்து 30 அல்லது 48 நாட்களுக்குத் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக, காலை உணவாக சமைத்த உணவுகளைத் தவிர்த்து, பயறு வகைகளை எடுத்துக் கொள்வது மூட்டு வலி, மூலநோய், சருமப் பிரச்சனைகள் போன்றவற்றை நீக்கி, உங்களுக்கு ஆரோக்கியத்தையும் இளமையையும் தரும், என்கிறார் டாக்டர் டெய்சி.
கற்றாழை ஜெல்லை வீட்டிலேயே தயாரிக்கும் முறை:
Advertisment
Advertisements
கற்றாழை இலையை வெட்டி, அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் முழுவதும் வெளியேறும் வரை செங்குத்தாக வைக்கவும். பின்னர், மேல் தோலை நீக்கி, ஓடும் நீரில் நன்கு அலசவும். உள்ளே உள்ள ஜெல்லை ஒரு ஸ்பூன் மூலம் எடுத்து, மிக்ஸியில் அடித்து ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இயற்கையான முறையில் அழகைப் பெறலாம். இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.