தீராத மலச்சிக்கல்? கலகலன்னு போக இந்த சூப்பர் டிரிங்க்; ஆனா 21 நாள் ஃபாலோ பண்ணனும்: டாக்டர் நிஷா

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவர்கள், கற்றாழை சாறுடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியாக உடலில் இருந்து வெளியேறி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவர்கள், கற்றாழை சாறுடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியாக உடலில் இருந்து வெளியேறி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

author-image
WebDesk
New Update
a

கற்றாழை சரும ஆரோக்கியத்திற்கு மட்டும்தான் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கும். செரிமான கோளாறுகள் ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை சாறு குடித்து வாருங்கள்.  இதனால் செரிமான பிரச்னைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும். இளம்பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான நோய்களுக்கு, கற்றாழை சாற்றை சர்க்கரை அல்லது தேன் கலந்து மிக்சியில் அரைத்து, கரண்டியளவு சாப்பிட தீரும்.
 
கற்றாழை சாறு தயாரிக்கும் முறை: 

Advertisment

மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லைப் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின் அந்த பானத்தை காலையில் உணவு உண்பதற்கு முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் குடிப்பதால் உடலில் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும்.

கற்றாழை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
 
பலருக்கு கண் வறட்சி, மங்கலான பார்வை, கண் அழற்சி போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, கற்றாழையில் கண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் கண்களில் உள்ள செல்களுக்கு புத்துயிர் அளித்து, கண்களின் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும். ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்  கொள்ளலாம்.
 
மலச்சிக்கல் பிரச்னையால் அவஸ்தைப்படுவர்கள், கற்றாழை சாறுடன் தேன் கலந்து தினமும் குடித்துவந்தால், அது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியாக உடலில் இருந்து வெளியேறி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக  வெளியேற்றிவிடும். உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, இயற்கையாகவே  உடல் எடை குறையும்.
 
வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்துடன் இருப்பது மிகவும் அவசியம். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில் உள்ள சாப்போனின்கள் 2-ம் ஒன்று சேர்ந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். வயது அதிகரிக்கும் போது, உடலில் உள்ள செல்கள் மெதுவாக சீரழிய ஆரம்பிக்கும். இதன் அறிகுறியாக இளமையிலேயே முதுமையான தோற்றம், உடல் பலவீனம், ஞாபக மறதி போன்றவற்றை சந்திக்கக்கூடும். ஆனால், கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடித்தால், இந்த  கலவையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச் சத்துக்கள், செல்கள் சீரழிவது தடுக்கப்பட்டு, உடற்செல்கள் ஆரோக்கியமாக  இருக்கும்.

Aloevera benefits for clean and healthy skin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: