aloo paratha recipe , aloo paratha recipe in tamil : சப்பாத்தி பிரியர்களுக்கு மற்றும் உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவுதான் இந்த ஆலு பரோட்டா. இதுவரை நாம் ஹோட்டலில் தான் வாங்கி தந்திருப்போம்.
Advertisment
ஆனால் இதனை அனைவரும் வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடலாம்.
aloo paratha recipe : செய்முறை!
கோதுமை மாவு மூன்று கப், தண்ணீர் ஒருகப் உப்பு எண்ணெய் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு 2 வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 கரம் மசாலா கொத்தமல்லி
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதில் உப்பு, எண்ணெய் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இதை முப்பது நிமிடம் ஊற வைக்கவும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்கு மசித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும் மசித்து வைத்த உருளைக்கிழங்கோடு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கரம் மசாலா கொத்து மல்லி தழை, உப்பு, சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் தேய்த்து, அதன் நடுவில் மசாலா உருண்டைகளை வைத்து நன்றாக மூடி மீண்டும் தேய்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி அதில் இந்த பராத்தாவை போடவும். இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டுசுற்றிலும் நெய் விட்டு எடுத்தால் சூடான ஆலு பராத்தா ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil