alya manasa dance alya manasas tik tok : சின்னத்திரை நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் நடிகை ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியலில் நாயகியாக கலக்கி இப்போது எங்கேயோ சென்று விட்டார். அறிமுகமான சீரியலிலே சஞ்சீவை காதலித்து கடைசியில் அவரையே திருமணமும் செய்துக் கொண்டார்.
சமூகவலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட மவுசு. ராஜா ராணி சீரியலோட `ஹிட்’டுக்கு முக்கியக் காரணம் இவங்களோட ஜோடிப் பொருத்தம்தான். சீரியல்ல சேர்ந்து நடிச்சதால, நிஜத்துல இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடீச்சி
இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து சிம்பிளாக ரிஷப்னையும் முடித்து விட்டனர். ஆரம்பத்தில் ஆல்யா- சஞ்சீவ் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று பலபேர் பலவிதமாக கொளுத்தி போட்டாலும் இவர்கள் மிகவும் தெளிவாகவே பேட்டி அளித்து வந்தனர்.
அவ்வளவு தான் ஆல்யா இனி சின்னத்திரயில் நடிக்க மாட்டார். அவரை நடிக்க சஞ்சீவ் அனுமதிக்க மாட்டார் என்றெல்லாம் அடுத்த வதந்திகள் வெளியாக தொடங்கினர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குள் ஆல்யா கர்பமாகினார்.ஆல்யாவின் ஆசைப்படி சஞ்சீவ், பிரம்மாண்டமாக வளைக்காப்பு விழாவை நடத்தினார். இந்த விழாவில் தான் ஆல்யாவின் பெற்றோர்கள் முதன்முதலாக கலந்துக் கொண்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆல்யா- சஞ்சீவ் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு ஆலியா சையத் என்று பெயரும், வைத்தனர் இந்த ஜோடி.
லாக்டவுனில் தங்களது முழு நேரத்தையும் ஆசை மகளுடன் செலவழித்து வருகின்றனர். இந்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பரவின.
இந்த நேரத்தில் தான், ராஜா ராணி 2வில் ரீஎண்ட்ரி கொடுத்து சந்தியா ரோலில் கலக்கி வருகிறார் ஆல்யா. அதுமட்டுமில்லை, டான்ஸ் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”