Alya Manasa Sajiev Daughter Aila Viral Video Tamil news : ஆல்யா மானசா, சஞ்சீவ் இருவரும் தனித்தனியே ரசிகர்கள் இருந்தாலும், இவர்கள் இவருடைய ரசிகர் எண்ணிக்கையை விட அதிகம் அய்லா பாப்பாவிற்கு. போகிற போக்கில் லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார் இந்த கியூட் பட்டாசு.
விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ். ஆன்ஸ்க்ரீனில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடியாக இருந்தவர்கள், ஒருகட்டத்தில் நிஜ ஜோடிகளாக ஆனார்கள். ராஜா ராணி தொடர் நிறைவடைந்தாலும், இருவரும் தங்களுக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான பொழுதுபோக்கு கன்டென்ட்டுகளை பதிவிட்டு வந்தனர்.
அந்த வரிசையில், தங்களின் குழந்தையை பற்றிய அப்டேட்ஸ் ஏராளமாகவே இருந்தன. குழந்தை பிறந்தது முதல் எழுந்து நடப்பது வரை, இந்த ஜோடியின் பயணத்தை விட, குட்டிபாப்பா அய்லாவின் சேட்டைகளுக்குத்தான் ரசிகர்களை அதிகம். அய்லாவின் பயணம், அய்லாவின் முதல் போட்டோஷூட், அய்லாவின் முதல் கார் என தற்போது இந்த ஜோடி அப்லோட் செய்யும் எல்லா காணொளிகளிலும் முக்கிய புள்ளியாக வளம் வருவது அய்லா மட்டுமே.

ஏற்கெனவே ஆல்யா மானசா, சிறிய குழந்தை போன்றுதான் சஞ்சீவிடம் நடந்துகொள்வார். இதில், அய்லாவும் இணைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு அக்கப்போராக இருக்கிறது சஞ்சீவின் நிலை. இதில், அய்லாவின் ரைம்ஸ் காணொளி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆல்யா மானசா, ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என பாட, அதற்கு ஏற்றபடி அய்லாவின் கியூட் ரியாக்ஷன் கொள்ளையழகு.
இப்பொழுதெல்லாம், ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவி பார்க்கும் போதெல்லாம், அய்லாவைதான் கண்கள் தேடுகின்றன. அந்த அளவிற்கு மனதோடு ஒன்றிப்போய் இருக்கிறார் அய்லா. பாப்பாக்கு சுத்திப்போடுங்க ஆல்யா!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil