Alya Manasa Sanjeiv Home Tour Viral Video Tamil News : எப்போதும் கியூட்டான வீடியோக்களை தங்களின் யூடியூப் சேனலில் பதிவு செய்து ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ், சமீபத்தில் தங்களின் சிறிய ஹோம் டூர் வீடியோவை அப்லோட் செய்திருந்தனர். 564 சதுர வீடு என்றாலும், அதனைப் பார்த்துப்பார்த்துச் செதுக்கி இருக்கிறார் சஞ்சீவ். வீட்டிற்குள் இருக்கும் பொருள்கள் முதற்கொண்டு அங்கிருக்கும் இன்டீரியர் டெக்கரேஷன் வரை அனைத்தையும் ஒரே நிறத்தில் தேர்வு செய்து, வீட்டை மிகவும் அழகாகப் பராமரித்து வைத்திருக்கும் அவர்களின் கியூட் லிட்டில் வீட்டில் என்னவெல்லாம் இருந்தன?

அவர்களின் முந்தைய வீடியோக்களில் வீட்டில் அமைப்பு ஒவ்வொரு விதமாக இருக்கிறதே. வீடு எப்படிதான் இருக்கும் என்று தங்களின் வியூவர்ஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த ஹோம் டூர் வீடியோவை எடுத்திருக்கின்றனர். அதனால், காணொளியைப் பார்த்த நம்மையும் வீட்டிற்குள் வரவேற்பது போல காட்சிப் பதிவு செய்திருந்தனர். பிறகு கிச்சனை தவிர மரத்தால் செய்த ஃப்ளோரிங், சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் அழகிய பேப்பர்ஸ் என ஏராளமான சுவாரசிய விஷயங்கள் இருந்தன.

பிறகு, தாங்கள் வாங்கிய விருதுகள், சிறிய டிவி, காற்று சுத்திகரிப்பான், தாய்ப்பாலில் செய்த அய்லாவின் கால் பாதம் காஸ்டிங் ஃப்ரேம் உள்ளிட்ட சில ஸ்பெஷல் பொருள்களை காட்டினார்கள். அது 1.5 BHK வீடு என்றபடி சஞ்சீவ் ஓர் சிறிய அறைக்கு அழைத்துச் சென்றார். அது, 8*6 சதுரடி அறை. அங்குச் சிறிய பெட், 2 நாற்காலி, கப்போர்டு இருந்தன. பக்கத்திலேயே வாக்கும் கிளீனர் ஒன்றையும் காட்டினார். தன்னுடைய தாய் கோயம்பத்தூரில் மிகப் பெரிய அழகுக் கலை நிபுணராக இருந்ததாகப் பகிர்ந்துகொண்ட சஞ்சீவ், அவரின் சொத்து எனப்படும் சில மேக்-அப் பொருள்களையும் காட்டினார்கள்.

பிறகு தன்னுடைய தாய் பரிசளித்த டிராலி, நீண்ட நாள் கனவான ரெக்லைனர் சோபா, ஆகியவற்றைக் காட்டினார். அடுத்ததாக தான மிகவும் ரசித்து டெகரேட் செய்த கிச்சன் பகுதியைக் காட்டினார். தனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கு இருக்கும் வசதிகள் எல்லாமே லேட்டஸ்ட்தான். , கருப்பு, க்ரே மற்றும் வெள்ளை நிறத்தில்தான் அங்கிருக்கும் பியூரிஃபையர் முதல் சாண்ட்லியர் வரை அனைத்தும் இருந்தன.

அடுத்ததாக பால்கனி. பெரும்பாலான மக்கள் ஒரு கப் காபியுடன் தனக்கு பிடித்தமானவர்களுடன் பால்கனியில் அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் இவரோ, கொசு வலை, சன் கட்டர் ஸ்க்ரீன், வாஷிங் மெஷின், கொடி என அங்கேயும் உபயோகமாக இருக்கும் ஓர் இடமாக மாற்றியிருக்கிறார். பிறகு, 10*10 சதுரடியில் இருக்கும் தங்களின் சிறிய பெட் ரூமை சுற்றிக்காட்டினர். ஆனால், அங்கே பெரிய டிவி செட் செய்து தியேட்டர் எஃபெக்ட் கொடுத்திருக்கிறார் சஞ்சீவ்.
இவ்வளவு சிறிய வீட்டில் ஏன் இருக்கவேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த வீட்டின்மேல் சஞ்சீவிற்கு ஒரு எமோஷனல் கனெக்ஷன் உண்டு. ஆம், இங்கு வந்தபிறகுதான் அவருக்கு ராஜ ராணி சீரியல் வாய்ப்பு கிடைத்ததாம். அதன்பிறகு ஆல்யா, இப்போது அய்லா என அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறியது இந்த வீட்டிற்கு வந்த பிறகு தானாம். அதனால், அவர்களுக்கு இந்த வீட்டின் மீது பாசம் அதிகம். என்றாலும், இவர்களின் மாபெரும் கனவு இல்லம் விரைவில் தன் கிரஹப்ரவேசத்தை கொண்டாட உள்ளது. ஆம், 2022-ல் எப்படியும் தங்களின் மாபெரும் வில்லாவை கட்டிமுடித்துவிடுவோம் என்றபடி அதன் 3D பலனையும் காட்டி, அந்த வீடியோவை நிறைவு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil