Alya Manasa Sanjiev Fridge Tour Youtube Review Tamil News : ஆல்யா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் இருவரும் இணைந்து தங்களுடைய யூடியூப் சேனலில் ஏராளமான காணொளிகளைப் பதிவேற்றி வருகின்றனர். அவற்றில் பல காணொளிகள் மில்லியன் கணக்கான வியூஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் வருவதுண்டு. அந்த வரிசையில் சமீபத்தில் அவர்களுடைய ஃப்ரிட்ஜ் டூர் காணொளி 1 மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

கண்ணாடிபோன்று தோற்றம் கொண்ட அவர்களுடைய ஃப்ரிட்ஜை பார்த்துக்கொண்டு நடனமாடிக்கொண்டிருந்தார் ஆல்யா. அவர்களுடைய ஃபிரிட்ஜின் நிறம் க்ரே. இதற்கான காரணம் அவர்களின் வீட்டிலிருக்கும் சோபா முதல் கர்டெயின் வரை எல்லாமே க்ரே நிறத்தில் இருப்பதால், ஃப்ரிட்ஜையும் அதே நிறத்தில் வாங்கி வைத்துவிட்டனர் என்கிற குறிப்போடு தங்களின் டூரை தொடங்கினர் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி.

ஃபிரிட்ஜ் உள்ளே கேமராவைப் பொருத்தி அதிலிருந்து இந்த டூர் காணொளியைத் தொடங்கினர். “இந்த ஃப்ரிட்ஜில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கே இது புதிய டூர்தான். இருவருமே ஷூட்டிங்கில் பிசியாக இருப்போம் என்பதால், வீட்டை பார்த்துக்கொள்வது அத்தைதான்” என்கிற டிஸ்க்ளைமரோடு ஆரம்பித்தார் ஆல்யா. ஒரு டிபன் பாக்சில் தேங்காய்ப் பால் சேமியா இருந்ததை எடுத்துப் பார்த்த சஞ்சீவிற்கு அவ்வளவு ஆனந்தம். அதுதான் அவருடைய ஃபேவரைட் உணவாம். அடுத்ததாக, குலாப் ஜாமுன், முட்டை, இட்லி பொடி உள்ளிட்டவற்றைக் காண்பித்துச் சிலாகித்துக்கொண்டிருந்தனர்.

அடுத்ததாக ஒரு பாக்ஸை திறந்த சஞ்சீவ், ‘அய்யோ’ என்று ஓடிவிட்டார். காரணம், அதில் இருக்கும் காய வாய்த்த மட்டன் துண்டுகள்தான். சஞ்சீவிற்கு கொஞ்சமும் அது பிடிக்காதாம். ஆனால், அவருடைய தாய்க்கு மிகவும் பிடித்த உணவுப் பொருளாம். பிறகு சுத்தமாகக் கழுவி, காயவைத்த கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை அழகாக மடித்து டிபன் பாக்சில் வைத்திருந்தார்.

அடுத்தது பால், கார்ன் ஃபிளாக்ஸ், சாக்கோஸ், தோசை மாவு என பிரேக்ஃபாஸ்ட் உணவு வகைகள் இருந்தன. தங்களின் குழந்தைக்காக பிரேத்தியேகமாக செய்து வைத்த மட்டன் சூப்பை கொஞ்சமாக ஆல்யா சிந்திவிட, அதனைத் துடிக்கிறேன் என்ற பெயரில் அவர் செய்த அட்ராசிட்டி வேற லெவல். பிறகு தங்களின் வீட்டில் எது இருந்தாலும் இல்லையென்றாலும் இது நிச்சயம் இருக்கும் என்று இஞ்சி பூண்டு விழுது டப்பாவை காண்பித்தனர்.
பிறகு என்ன, ஆல்யா கொட்டித்தீர்க்கும் சாஸ்,மயோனைஸ் பொருள்கள், சாக்லேட், புளி கரைசல், ஜூஸ், நன்னாரி சர்பத் உள்ளிட்டவையும் இவர்களுடைய ஃப்ரிட்ஜில் ஓர் அங்கமாக இருந்தன. பழங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வப்போது வாங்கி உபயோகிக்கும் சிறிதளவு காய்கறிகளை நிரப்பி வைத்தனர். காய்கறிகள் வைக்கும் இடத்தில் ஏராளமான பழங்களை வைத்திருந்தனர். இறுதியாக ஐஸ் பேக்ஸ், ஃப்ரோஸன் உணவு வகைகள், ஐஸ் க்ரீம் உள்ளிட்டவை இருந்தன. வழக்கம்போல ஃபிரிட்ஜின் மேல் ஒட்டிய மேக்னட்ஸ் காண்பித்துவிட்டு காணொளியை நிறைவு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil