லிவிங் ஏரியா நைட் பெட்ரூமா மாறிடும்- ஆல்யா சஞ்சீவ் ஹோம் டூர் வீடியோ
இந்த வீட்டுல எல்லாருமே கிட்டகிட்ட இருப்போம். ரொம்ப பிரிவு இருக்காது. கல்யாணத்துக்கு அப்புறம் நான் குழந்தைங்களோட என்ஜாய் பண்றது எல்லாமே இந்த வீட்டை சுத்திதான் இருக்கு.
`ராஜா ராணி' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Advertisment
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆல்யா மானசா, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `இனியா' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல, சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `கயல்' தொடரில் நடிக்கிறார்.
சமீபத்தில் கலட்டா தமிழ் யூடியூப் சேனலில் வெளியான ஆல்யா சஞ்சீவ் ஹோம் டூர் வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் ஆல்யா கூறுகையில், ’இது ரொம்ப செண்டிமென்ட் லக்கி ஆன வீடு. அதைத் தாண்டி இந்த வீட்டுல நிறைய நன்மைகள் இருக்கு. இது 1.5 bhk வீடு தான். இந்த வீட்டுல நாங்க 6 பேர் தங்குறோம்.
இப்போ நீங்க இருக்கிற லிவிங் ஏரியா நைட் ஒரு பெட்ரூமா மாறிடும்.
அதனால இந்த வீட்டுல எல்லாருமே கிட்டகிட்ட இருப்போம். ரொம்ப பிரிவு இருக்காது. கல்யாணத்துக்கு அப்புறம் நான் குழந்தைங்களோட என்ஜாய் பண்றது எல்லாமே இந்த வீட்டை சுத்திதான் இருக்கு. நாங்க ஷூட்டிங் போனாலும் எங்க போனாலும் இந்த வீட்டுக்கு நாங்க வந்துருவோம், இப்படி அந்த வீடு பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை ஆல்யா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“