Advertisment

டேபிள், பாக்ஸ், சிம்னி.. எல்லாமே கருப்பு வெள்ளைதான் - ஆல்யா மானசா- சஞ்சீவ் கிச்சன் டூர்!

Alya Manasa Sanjiev Kitchen Tour Viral Video Tamil News ஸ்டோர் பண்ணவேண்டிய பொருள்களை எப்படி அழகாக அடுக்கி வைக்கலாம் என்பதையும் பகிர்ந்துகொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Alya Manasa Sanjiev Kitchen Tour Viral Video Tamil News

Alya Manasa Sanjiev Kitchen Tour Viral Video Tamil News

எப்போதுமே துருதுருவென ஜாலியான காணொளிகளை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் வரும் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடியின் சமீபத்திய வீடியோ, குறைந்த நேரத்திலேயே 4 லட்ச வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. அப்படி என்ன அந்த காணொளியில் ஸ்பெஷல்? சிறிய அளவு கிச்சன் அறையை எப்படி அழகாகப் பராமரிக்கலாம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்..

Advertisment

வேலையிலிருந்து வந்த வந்ததும், நாம டூர் போகப் போறோம் என்று சஞ்சீவ் கூறியதும் துள்ளிக்குதித்து ஓடி தயாரானார் ஆல்யா. விறுவிறுவென புது ஆடைகளை உடுத்தி தயாராகி வெளியே வந்தவருக்கு, ஒரு ஷாக் நியூஸ் கொடுத்தார் சஞ்சீவ். நாம் போகப்போவது கிச்சன் டூர் என்று கூறியதும், செல்லமாக சண்டை போட்டுக்கொண்டு, கிச்சன் பக்கம் நம்மை அழைத்துச் சென்றனர். சும்மாலாம் இல்லை, 'அடுத்த டூர் கோவா கூட்டிக்கொண்டு போகிறேன்' என்று சஞ்சீவ் கூறியபிறகுதான் ஆல்யா சமாதானம் ஆனார்.

publive-image

ஏற்கெனவே தன்னுடைய ஹோம் டூரில் தனக்கு இந்த வீடு எவ்வளவு ஸ்பெஷல் என்பதையும், அதிலும் குறைந்த அளவுகொண்ட அந்த இடத்தில், கிச்சனை எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து வடிவமைத்தார் என்பதையும் பகிர்ந்துகொண்டார். இந்தக் குறிப்போடு மேலும் பல சுவாரசிய தகவல்களையும் இந்த வீடியோவில் ஷேர்  செய்தார். 48 சதுரடி தான் அவர்களுடைய கிச்சன் அளவு என்பதால், ஒரு ஆள் மட்டுமே நின்று சமைக்க முடியும். அதனால், அந்தப் பொறுப்பை சஞ்சீவிடம் ஒப்படைத்துவிட்டதாகப் பெருமையாகப் பகிர்ந்துகொண்டார் ஆல்யா. அதுமட்டுமின்றி, கிச்சன் டூர் முடிவில் தனக்கு ஏதாவது ஸ்பெஷல் உணவு சமைத்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இது வெறும் டூர் மட்டும்தான், சமையல் நிகழ்ச்சி அல்ல என்றபடி கிச்சனுக்கு கூட்டிச்சென்றார் சஞ்சீவ். அவர்கள் கிச்சனில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில்தான் அனைத்துப் பொருள்களும் இருக்கிறது. சிம்னி, குக்கிங் டேபிள், டோஸ்ட்டர், ஜூஸர், மிக்சி உள்ளிட்ட பொருள்கள் கறுப்பு நிறத்தில் மின்னின. பிறகு, உப்பு முதல் சர்க்கரை கொட்டி வைத்த டப்பாக்கள் அனைத்துமே வெள்ளை நிறத்தில் இருந்தன. அங்குப் போடப்பட்டிருந்த டைல்ஸ் கூட பார்த்துப் பார்த்து வாங்கி ஒட்டியதாம்.

publive-image

அடுப்பில் ரெகுலேட்டரை குழந்தைகள் உபயோகித்து விடக்கூடாது என்பதற்காக பிரத்தியேக லாக் ஒன்றை வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். பிறகு, டிவி போன்று இருக்கும் சிம்னி பற்றி விளக்கமளித்தனர். பிறகு, பாத்திரம் கழுவும் இடத்தை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்பதற்கான சிம்பிள் டிப்ஸ் கொடுத்துவிட்டு, ஸ்டோர் பண்ணவேண்டிய பொருள்களை எப்படி அழகாக அடுக்கி வைக்கலாம் என்பதையும் பகிர்ந்துகொண்டனர்.

அவ்வளவு சிறிய இடத்தில் எப்படி இவ்வளவு அழகாகவும் சீராகவும் பொருள்களை அடுக்கி வைத்து, சமைக்க முடிகிறது என்று வியக்க வைக்கும் அளவிற்கு இருந்தது இவர்களுடைய இந்த கிச்சன் டூர். 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Alya Manasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment