காணாமல் போன மொபைலை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? – ஆல்யா சஞ்சீவின் திக் திக் நிமிடங்கள்!

Alya Manasa Trending Viral Video Tamil ‘யாருடா அந்த பைக் காரன்?’ என்பதோடு இவர்களின் இந்த வீடியோவின் பகுதி 1 நிறைவடைந்திருக்கிறது.

Alya Manasa Sanjiev Youtube Channel Trending Viral Video Tamil
Alya Manasa Sanjiev Youtube Channel Trending Viral Video Tamil

Alya Manasa Sanjiev Youtube Channel Trending Viral Video Tamil : பிரபலங்களும் யூடியூபில் களம் இறங்கியதால், சோலோ கிரியேட்டர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. சின்னதிரை, வெள்ளித்திரை என அங்கேதான் இவர்களைப் பார்க்கிறோம் என்றால், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இவர்களேயேதான் காணமுடிகிறது. அதிலும், ஹோம் டூர், மேக் அப் டிப்ஸ், சமையல் குறிப்புக்கள் என ஒரேபோன்ற கன்டென்டுகள்தான் பிரபலங்கள் பெரும்பாலும் தேர்வு செய்வது. அந்த வரிசையில் சற்று வித்தியாச காணொளியைப் பதிவு செய்திருக்கின்றனர் விஜய் டிவி ராஜா ராணி புகழ் ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடி.

சஞ்சீவ் & ஆல்யா எனும் இவர்களின் சேனலில் சமீபத்தில் தங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அப்படியே நடித்து அப்லோட் செய்திருந்தனர். நடிப்பா, ஒரிஜினலா என்கிற அளவிற்கு அவ்வளவு தத்ரூபமாக இருந்தது இவர்களின் இந்த வீடியோ. 9 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கும் இந்த காணொளியில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஆல்யா, தன்னுடைய ஐபோனை தொலைத்துவிடுகிறார். அதனை தன் கணவர் சஞ்சீவ் மற்றும் அவர்களின் உறவினர்களோடு வீடு மற்றும் வீட்டின் மொட்டைமாடி என எல்லா இடங்களிலும் பரபரப்பாகத் தேடுகிறார் ஆல்யா. எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், ‘Find My Mobile’ செயலி மூலம், தொலைந்த மொபைலை தன் வேறொரு மொபைலில் இணைத்து வைத்திருக்கும் ஞாபகம் ஆல்யாவிற்கு வர, அந்த செயலியை ஓபன் செய்கிறார்.

பிறகு, அந்த செயலியின்படி தொலைந்த மொபைல் இருக்கும் இடத்தை நோக்கி காரில் பயணிக்கின்றனர். இரவு நேரம் என்பதால் ஆல்யாவிற்கு கூடுதல் பயம். யாருமில்லா அமைதியான மைதானத்தை நோக்கி கார் செல்ல, தொலைந்த மொபைல் அந்த மயான அமைதியான மைதானத்தில்தான் இருப்பதாக செயலி காண்பிக்கிறது. சட்டென வண்டியை நிறுத்தி, சஞ்சீவ் மட்டும் காரை விட்டு இறங்குகிறார்.

அந்த செயலி குறிப்பிடும் வழித்தடத்தைப் பின்பற்றிச் செல்லும்போது, தொலைந்த மொபைலில் இருந்து அலெர்ட் சத்தம் வருகிறது. அதை வைத்து காணாமல் போன மொபைலை சஞ்சீவ் கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால், யார் அந்த நேரத்தில் மொபைலை எடுத்துக்கொண்டு யாருமில்லா மைதானத்தில் ஒளித்து வைத்திருப்பார்கள் என்று தேடும் முயற்சியில் சஞ்சீவ் இறங்க, அவர்கள் கண்களில் ஒரு ஓரத்தில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று தென்படுகிறது.

‘யாருடா அந்த பைக் காரன்?’ என்பதோடு இவர்களின் இந்த வீடியோவின் பகுதி 1 நிறைவடைந்திருக்கிறது. அந்த நபர் யார் என்பது அடுத்த வீடியோவுக்கான ட்ரைலர்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Alya manasa sanjiev youtube channel trending viral video tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express