New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Ams2.jpg)
Alya Manasa Sanjiev Youtube Channel Viral Video Tamil News
Alya Manasa Sanjiev Youtube Channel Viral Video Tamil News
Alya Manasa Sanjiev Youtube Channel Viral Video Tamil News : சமீபத்திய சின்னதிரை ரியல் ஜோடிகளில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிதான். அவர்கள் தங்களுக்கென்று தனி யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் ஏராளமான ஃபன் கன்டென்ட் காணொளிகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில், சமீபத்தில் அவர்கள் வயநாடு சென்ற சுற்றுலா Vlog அப்லோட் செய்தனர். அந்த குறிப்பிட்ட காணொளியில், குடும்பத்தோடு அவர்கள் செய்த அட்ராசிட்டிகள் அனைத்தும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சஞ்சீவினி பிறந்தநாளும் வர, சஞ்சீவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் செய்திருந்தார் ஆல்யா. அதனை ஓர் தனி காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டிருந்தனர். இது மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
"என்னுடைய பிறந்தநாளை எவ்வளவு அழகா கொண்டாடினாங்க. நானும் அதேபோல் என் பப்புவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்காக இங்க வயநாடுல மழைக்கு நடுவுல இந்த வில்லாவில் பிளான் பண்ணியிருக்கிறேன். இந்த மலைக்கு நடுவில் கேக் எங்கு வாங்குவது? வாய்ப்பே இல்லையே. ஆனால், இங்கு ஒரு வீட்டில் கேக் செய்ய சொல்லி கொடுத்திருக்கிறேன்.
அது மட்டும் போதுமா? என் பாப்புவுக்கு ஏராளமான பரிசு பொருள்களும் வாங்கி வைத்திருக்கிறேன்" என்றபடி வழக்கம் போல நடனமாடினார் ஆல்யா. பிறகு உறங்கிக்கொண்டிருந்த சஞ்சீவை எழுப்பி, மாடிக்குப் போக பயமாக இருக்கிறது என்று கூறி, கொண்டாட்ட இடத்திற்கு கூட்டிச்சென்றார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத்தான் அழைத்துச் செல்கிறார் என்று ஆல்யாவிடம் கூறிய சஞ்சீவிடம், 'கொஞ்சமாச்சு தெரியாதது போல நடிங்க' என்று கூறிய விதம் கியூட்.
பிறகு என்ன, கேக் வெட்டி கொண்டாட்டம் ஆரம்பம். அடுத்ததாகத் தான் வாங்கி வந்த ஃபிளாஸ்க், பெர்ஃபியும், டீ-ஷர்ட், ஜீன்ஸ், லிண்ட் கிளீனர் உள்ளிட்ட பரிசு பொருள்களை கொடுத்தார் ஆல்யா. பிறகு, இது சும்மா ட்ரெயிலர்தான், மெயின் கொண்டாட்டம் சென்னையில்தான் என்கிற டீசரை சஞ்சீவிற்கு சொல்வதுபோல நமக்கு கூறினார் ஆல்யா. அப்புறம் என்ன! சென்னை கொண்டாட்டத்திற்கு நாமும் காத்திருக்கவேண்டியதுதான்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.