/tamil-ie/media/media_files/uploads/2021/03/Amup.jpg)
Alya Manasa shares glowing skin beauty secret Tamil News
Alya Manasa shares glowing skin beauty secret Tamil News : 'மானாட மயிலாட' நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர்மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இந்த தொடரில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஆல்யாவோடு இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
Alya Manasaஇவர்களுடைய காதலுக்கு இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு இருந்ததால், வீட்டை விட்டு வெளியேறி தனியே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சமீபத்தில் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ராஜா ராணி தொடரின் வெற்றியை அடுத்து தற்போது ராஜா ராணி இரண்டாம் பகுதி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதில் ஆல்யா கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சஞ்சீவ் வெள்ளித்திரையில் பிசியாக இருக்கிறார்.
Alya Manasa Photoshootஆல்யா எப்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ். தான் எடுக்கும் போட்டோஷூட் முதல் ஷூட்டிங் இடத்தில் எடுக்கும் ரீலிஸ் வீடியோக்கள் வரை அத்தனையும் சோஷயல் மீடியாக்களில் பதிவிடுவது இவரின் வழக்கம். அந்த வரிசையில் ஏராளமான அழகுக் குறிப்புகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அதிலும் இவருடைய பளபளக்கும் சருமத்திற்குக் காரணம் அவருடைய கணவர் சஞ்சீவ்தான் என்று குறிப்பிடுகிறார்.
பொலிவானது தோற்றத்திற்கு தினமும் மூன்று வேளை நன்கு முகத்தைக் கழுவுவது மற்றும் ஏராளமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிடும் ஆல்யா, ஆரோக்கியமான சருமத்திற்கு சஞ்சீவ் கூறிய ஒரு சீக்ரெட்டையும் பகிர்ந்திருக்கிறார்.
Alya Manasa with Sanjeevஅசைவங்களில் மீன் பிடிக்காத ஆல்யாவை, அதிகமாக மீன் சாப்பிட வைத்திருக்கிறார் சஞ்சீவ். பளபளக்கும் சருமத்திற்கு மீன் மிகவும் நல்லது எனக்கூறுவது மட்டுமல்லாமல் ஆல்யாவுக்காக சமைத்தும் கொடுப்பாராம். மீன் உட்கொள்வது உண்மையிலேயே சருமத்தில் மாற்றம் கொண்டு வந்தது என்று கூறுகிறார் ஆல்யா!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us