சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ராஜா- ராணி ஜோடியின் திருமணம்.. லீக்கான ஃபோட்டோஸ்

நிச்சயதார்த்தம் முடிந்தபின் கல்யாணம் குறித்து எந்த தேதியும் அறிவிக்கவில்லை.

alya manasa wedding
alya manasa wedding

alya manasa wedding : சினிமா ஜோடிகளுக்கு நிகராக பேசப்பட்ட டெலிவிஷன் ஜோடி சஞ்சீவ்- ஆலியா மானஸா ஜோடிக்கு ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்தது. அதுவும் சத்தமே இல்லாமல் ரகசியமாக. இந்நிலையில் இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து சிம்பிளாக ரிஷப்னையும் முடித்து விட்டனர். இந்த புகைப்படங்களை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா -ராணி சீரியல், சீரியல் பிரியர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் படு ஃபேமஸ்.இதில் வரும் கார்த்திக் – செம்பா ஜோடியை இணைத்து வைத்ததே ரசிகர்கள் கூட்டம் தான். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.அந்நிலையில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தபின் கல்யாணம் குறித்து எந்த தேதியும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ஆலியா பிறந்த நாள் அன்றே திருமணம் முடிந்து விட்டதாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார்.

 

சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடியின் திருமண வரவேற்பு சிம்பிளாக நடைப்பெற்று முடிந்தது. அந்த ஸ்பெஷல் ஃபோட்டோஸ் தற்போது இணயத்தில் அதிகம் பரவி வருகிறது.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Alya manasa wedding alya manasa reception raja rani karthick semba wedding

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com