டெலஸ்கோப், அட்டைப்பெட்டி, அய்லா – ஆல்யா மானசா – சஞ்சீவ் அலமாரி டூர்!

Alya Mansa Sanjiev Wardrobe Tour Viral Video Tamil News வீட்டினுள் ஒரு சின்ன பூச்சி கூட வரக்கூடாது என்பதற்காக அட்டைப்பெட்டிகளை வீட்டில் சேர்ப்பதில்லை.

Alya Mansa Sanjiev Wardrobe Tour Viral Video Tamil News
Alya Mansa Sanjiev Wardrobe Tour Viral Video Tamil News

Alya Mansa Sanjiev Wardrobe Tour Viral Video Tamil News : விதவிதமான காணொளிகளை தங்களுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றும் சின்னதிரை ஜோடி ஆல்யா மற்றும் சஞ்சீவ், சமீபத்தில் தங்களுடைய வார்ட்ரோப் டூர் விடிவை அப்லோட் செய்திருந்தனர். மற்ற பிரபலங்களை ஒப்பிடுகையில் இவர்களுடைய அலமாரி மிகவும் எளிமையானதாகவும் பலருக்கும் அவர்கள் அடுக்கி வைத்திருக்கும் முறை உபயோகமாகவும் இருந்தது. அப்படி என்ன ஸ்பெஷல் அந்த வீடியோவில்?

பத்துக்கு பத்து அகல அறை, அதில் 9 அடி அலமாரி என அவர்களின் அறை மிகவும் காம்பேக்ட்டாகவே இருந்தது. அதிகப்படியான இடத்தை குறைக்க கப் போர்டு உள்ளேயே ட்ரெஸ்ஸிங் டேபிள் வைத்து அசத்தியிருக்கிறார் சஞ்சீவ். அதன்பக்கத்திலேயே அவர்களின் குழந்தை அய்லாவின் பொருள்கள். அதற்குப் பக்கத்திலிருந்த அலமாரியில் குழந்தையின் அக்சஸிரிஸ், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அடுக்கி வைத்திருந்தனர். தன்னுடைய லெக்கிங் விலை 150 ரூபாய்தான் ஆனால் அய்லாவின் லெக்கிங்ஸ் 500 ரூபாய் என்று குமரிக்கொண்டே அடுத்த அலமாரியைத் திறந்தார்.

அந்த கப்போர்டை திறந்ததும் அதனுள் அய்லா வந்தார். பார்க்கவே கியூட். பிறகு அம்மாவும் பொன்னும் ஒரு சின்ன பந்துக்காகச் சண்டை போட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அவருடைய கப்போர்டிலும் அய்லாவின் துணிகள் இருக்கிறது என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டார் ஆல்யா. பிறகு தன்னுடைய கேஷுவல் உடைகள் மற்றும் ஷூட்டிங்காக உடுத்தும் புடவைகள் என சில உடைகளைக் காண்பித்தார். மேலிருக்கும் அலமாரியில் கற்கள் பதித்த கவுன், லெஹெங்கா என அதிக வேலைப்பாடுகள் நிறைந்த உடைகளை அழகாக அடுக்கி வைத்திருந்தனர். மேலும், சஞ்சீவின் டாக்குமென்ட்ஸ், நோட்ஸ், கேட்ஜெட்ஸ், அக்சஸரீஸ் என அதற்கும் தனியாகப் பகுதிகளை ஒதுக்கி இருந்தனர்.

அடுத்த கப்போர்டு சஞ்சீவுடையதாக இருக்கும் என்று நினைத்தால், அதுதான் இல்லை. அதிலும் ஆல்யா, அய்லாவுடைய பொருள்கள்தான் இருந்தன. போனாப்போகிறது என்பதுபோல் ஒரேயொரு பகுதி மட்டும் சஞ்சீவிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அது முழுவதும் கறுப்பு வண்ண டீ-ஷார்ட் மட்டும்தான். அதுவும் 150 ரூபாய் சட்டைகள்தான் என்கிற குறிப்பையும் முன்வைத்தார் ஆல்யா. சஞ்சீவின் மற்ற உடைகள் எல்லாம் அவருடைய அம்மா அறையில்தான் இருக்கிறதாம்.

வாரத்திற்கு ஒருமுறையாவது அறையின் ஆம்பியன்ஸை மாற்றவேண்டும் என்பதற்காக ஏராளமான பெட் ஸ்ப்ரெட் மற்றும் க்வில்ட்களை அடுக்கி வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து சஞ்சீவிற்கு டெலஸ்ஸ்கோப் மிகவும் பிடிக்கும் என்பதால், அதனை பொக்கிஷம் போல வைத்திருக்கின்றனர். அதனுடன், கேமரா, கிம்பில் என சில பெரிய கேட்ஜெட்டுகளை வைத்திருந்தனர். மேலும், வீட்டினுள் ஒரு சின்ன பூச்சி கூட வரக்கூடாது என்பதற்காக அட்டைப்பெட்டிகளை வீட்டில் சேர்ப்பதில்லையாம். அய்லா மீது சிறு கொசு கடித்தாலும் தாங்க முடியாது என்பதனால், பூச்சி வராமல் பார்த்துக்கொள்வதில் குடும்பமே கண்விழித்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றதுபோல் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Alya mansa sanjiev wardrobe tour viral video tamil news

Next Story
தோல் சுருக்கம் வராமல் இருக்க இது அவசியம் – சரண்யா துராடி சரும பராமரிப்பு டிப்ஸ்!Serial Actress Sharanya Turadi Skincare Tips Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com