எழுத்தாளர் கலீல் ஜிப்ரானின் 'தீர்க்கதரிசி’ எனும் புத்தகம் உலகப்புகழ் பெற்றது. இந்த புத்தகத்தில் கற்பனை தீர்க்கதரசியான அல்முஸ்தபா கதாபாத்திரம், மனித வாழ்க்கையில் பொதிந்துள்ள இயல்பை வெளிபடுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும். பல கதாபாத்திரங்கள் குறிப்பாக பெண்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தீர்கதரசி பதில் அளிப்பது போல் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், நடிகை அமலா பால் தீர்க்கதரசி புத்தகத்தை மேற்கோள் காட்டி, சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து தனது ஆதங்கத்தை இன்ஸ்ட்டாகிராமில் வெளிபடுத்தியுள்ளார்.
தனது இன்ஸ்ட்டாகிராம் பதிவில்," தீர்க்கதரிசனத்தில் உள்ள அனைத்து சிறந்த கேள்விகளும் பெண்களால் கேட்கப்படுகின்றன-
தீர்கதரசி புத்தகத்தில் காதல்,திருமணம்,குழந்தைகள், வலி, நம்பகத்தன்மை, உண்மை குறித்த முக்கிய கேள்விகள் பெண்களால் கேட்கப்படுகின்றன. ஏனெனில், இந்த கேள்விகள் கடவுள் பற்றியதோ,தத்துவ அமைப்பை பற்றியதோ அல்ல, அடிப்படை வாழ்க்கையைப் பற்றியது.
பெண்ணில் ஏன் கேள்வி எழுந்துள்ளது?
பெண் அடிமைத்தனத்தை அனுபவித்தாள், அவமானத்தை உணர்ந்தாள், பொருளாதாரத்தில் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டாள், எல்லாவற்றிற்கும் மேலாக,தொடர்ச்சியாக கற்பம் தரிக்கப்பட்டாள்
.
பல நூற்றாண்டுகளாக வலியின் கணத்தோடு வாழ்ந்து வருகிறாள். வயிற்றுக்குள் உள்ள குழந்தை அவளை சாப்பிடகூட அனுமதிக்காது. ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும், கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் மரணம் தான். அந்த மரணபயம் தீருவதற்கு முன்பே, மீண்டும் அவளை கர்ப்பமாக்கத் கணவன் தயாராக இருக்கிறான்.
மனிதர்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்கூடமாக பெண்ணின் உடல் அமைந்துவிட்டது என்றே தெரிகிறது. .
ஆண்களின் செயல்பாடு என்ன? பெண்ணின் வலியில் அவர்கள் பங்கேற்கவில்லை. அந்த ஒன்பது மாதங்கள், அவர்களின் வேலை என்ன? ஆணின் காமத்திற்கும், பாலுணர்வுக்கும் பெண் ஒரு பொருளாக்கப்பட்டாள்.
அதன் விளைவு குறித்து யோசிக்க ஆண் சிறிதும் கவலைப்படவில்லை.
'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? இங்கு 'காதல்' என்ற வார்த்தை அர்த்தமற்று உள்ளது. கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே பெண் நடத்தப்படுகிறாள்" என்று பதிவிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.