சத்துக்கள் நிறைந்த தாவரங்களில் ஒன்றாக இருப்பது ஆரை வகைகள். இந்த ஆரைகள் 3 வகைகளாக, ஆரை, புளியாரை மற்றும் வல்லாரை என சிறந்த கீரைகளாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இந்த வல்லாரை கீரையில் அனைத்து நன்மைகளும் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை என்ற பெயரை பெற்றது.
வல்லாரை கீரையில் இருக்கும் சத்துக்கள்:
இரும்புச்சத்து
சுண்ணாம்புச்சத்து
வைட்டமின் A
வைட்டமின் C
தாது உப்புக்கள்
வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும்.
வல்லாரை கீரை மருத்துவ பயன்கள்:
வெரிகோஸ் வெயின்ஸ் எனும் நரம்பு சுருள் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் வீக்கம் குறைந்து, இரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் என்கிறார் மருத்துவர் சந்தோஷிமா. வல்லாரை கீரையில் உள்ள சத்துகள் மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியப்படுத்தும். இதனால், மூளைச்சோர்வு குறைந்து ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
மேலும், உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. வல்லாரை கீரை சாப்பிடுவதால் நாட்பட்ட புண்கள், வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது. வல்லாரை கீரை சாறு எடுத்து மோருடன் கலந்து பருகுவதால் வயிற்றுப்புண்கள் விரைவில் குணமடையும் என்கிறார் மருத்துவர் சந்தோஷிமா.