/indian-express-tamil/media/media_files/IZTOlqzzpzZcEtnx1BUm.jpg)
அம்பானி வீட்டு விசேஷத்தில் பணியமர்த்தப்பட்ட முக்கியமான நபர் இவர்தான்
ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்திற்கு சென்றவர்களுக்கு டீ தயாரிக்க முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியால் பணியமர்த்தப்பட்ட நபர் 120 வகையான டீ தயாரித்து உறவினர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் பிரமாண்ட திருமணத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவர்களின் ஆடம்பரமான திருமணத்தில் உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் கலந்து கொண்டதையும் தாண்டி, திருமணத்தின் சிறப்பம்சமே அதன் தீம் மற்றும் சுவையான உணவே ஆகும். நீதா அம்பானி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரபலமான உணவுகளையும் ஏற்பாடு செய்தார். இதற்காக லக்ஷ்மண் ஓஜாவும் தேநீர் தயார் செய்வதற்காக பணியமர்த்தப்பட்டார்.
லக்ஷ்மண் ஓஜா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தோரி ஆவார். இவர் 120 வகையான டீ தயாரிப்பதில் பெயர் பெற்றவர். "லச்சு" என்று அன்புடன் அழைக்கப்படும் ஓஜா, கடலின் ஒரு சிறிய தீவில் விருந்தினர்களுக்கு தனது சிறப்பு "குங்குமப்பூ மசாலா தேநீர்" வழங்கியதில் இருந்து அனைவராலும் பிரபலமாக அறியப்பட்டார். மேலும் திரைப்பட நடிகர் அசுதோஷ் ராணா மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் அவர் தேநீர் வழங்கி இருக்கிறார்.
இதேபோல ஆனந்த்-ராதிகாவின் திருமணத்திலும் லக்ஷ்மண் ஓஜா விருந்தினர்களுக்கு 120 வகையான தேநீர் வழங்கி இருக்கிறார். ஓஜா சுமார் 15 ஆண்டுகளாக டீ செய்து வருவதாகவும் பல வகையான டீ செய்து கற்றுக்கொள்ள கடினமாக உழைத்ததாகவும் தெரிவித்தார்.தேநீரின் தனித்துவம் சிறப்பு மசாலாப் பொருட்களின் கலவையில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஸ்பெஷல் குங்குமப்பூ மற்றும் பான் டீ லக்ஷ்மண் ஓஜாவின் மிகவும் பிரபலமான தேநீர் ஆகும். அதை அவர் தனது சிறப்பு மசாலாப் பொருட்களால் தயார் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.