Advertisment

மெரினாவில் குடிநீர் தயாரிக்கலாம்: அமெரிக்க விஞ்ஞானி கூறும் சிம்பிள் டெக்னிக்

எதிர் காலத்தில் குடிநீருக்காக உலகப் போர் மூழும் அபாயம் உள்ளதா? மெரினாவிலே எளிமையாக குடிநீர் தயாரிக்கும் முறையை விளக்குகிறார் அமெரிக்க விஞ்ஞானி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Marina

இயற்கைக்கு எதிரான பல்வேறு காரணிகளால் இன்னும் சில சதாப்தங்களில் நாடுகளுக்கு இடையே தண்ணீர் போர் மூழும் அபாயம் உள்ளதாக சமீப காலமாக இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு அச்சம் நிலவுகிறது.

Advertisment

ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது. உலகின் 97% நீர் கடலில் இருக்கிறது. மீதி உள்ள 3% நீரில், 2.5% அளவு பூமிக்கடியிலும், பனிப்பாறைகளிலும் இருக்கிறது. ஆக 0.5% நீர் தான் அனைத்து நதிகள், ஏரிகளில் குடிப்பதற்கு கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்: சங்கு முத்திரை, பூங்குளம் சுனை, பொதிகை மலை – ஆன்மிகம் நிறைந்த அகஸ்தியர் மலை டிரெக்கிங்

எனவே, இவ்வளவு கடல்நீரை வைத்துக்கொண்டு இந்த 0.5% நீருக்கு உலக மக்கள் அடிதடியிலும், போரிலும் இறங்கவேண்டியதில்லை என்கிறார் அமெரிக்கா இல்லினாய் பல்கலைக்கழக பேராசிரியர் ப்ரவீன் குமார்.

இதுகுறித்து ப்ரவீன் குமார் கூறியதாவது; மழைநீர் எதில் இருந்து வருகிறது? மேகங்களில் இருந்து வருகிறது. மேகங்கள் எப்படி உருவாகின்றன? கடல்நீர் ஆவியாவதில் இருந்து உருவாகின்றன. ஆக நன்றாக வெயில் கொளுத்தும் துபாய், சென்னை, மெக்கா, கலிபோர்னியா மாதிரியான வறட்சியான பகுதிகளில் இருக்கும் கடலுக்கு மேலே பல கோடிக்கணக்கான டி.எம்.சி கடல்நீர் குடிநீராக மாறி மேலே மேகமாக செல்கிறது. அந்த மேகங்கள் நகர்ந்து சென்று அமேசான் காடுகளிலும், சிரபுஞ்சியிலும் மழையாக பெய்கின்றன.

சென்னைக்கு அருகே கடலில் ஒரு மோட்டரை நிறுவுங்கள். கடலுக்கு சற்று மேலே உள்ள காற்றை அது உறிஞ்சி எடுத்து கடற்கரையில் இருக்கும் ஒரு குழாயினுள் செலுத்தும். அந்த காற்றில் 50%க்கும் மேலாக இருப்பது நீராவிதான். குழாயை குளிர்வித்தால் போதும். நீராவி குளிர்ச்சியடைந்தால் சுத்தமான குடிநீர் கிடைக்கும். இதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலமாகவும், கடல் அலை மூலமாகவும் அங்கேயே பெறலாம்.

ஒரு கப்பல் அளவு பெரிய அமைப்பை கடலில் நிறுவினால் அது ஐந்து லட்சம் பேரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமாம். அது சரி இதற்கான செலவு? ரொம்ப சிம்பிள்.. ஆயிரம் லிட்டர் நீருக்கு ரூ 182 என கணக்கிடபடுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் விலைவாசி, தொழில்நுட்பம் ஆகியவற்றை பொறுத்து இது மாறுபடும். என்று ப்ரவீன் குமார் கூறினார்.

மேலும், இதன் முக்கிய நன்மை கடல்நீரை குடிநீராக்குவதில் கடல் மாசுபடுவது மாதிரி இதில் எதுவும் நட்பபது இல்லை. மிக எளிய தொழில்நுட்பம் போதும். அரசு செய்யவேண்டும் என காத்திருக்காமல் தனியார் கம்பெனிகளே தமக்கான குடிநீரை இப்படி ஒரு தொழிற்சாலையை நிறுவி பெற்றுக்கொள்ளலாம். இது உலக அளவில் பரவினால் குடிநீர் தட்டுபாடே இல்லாமல் போய்விடும், என்றும் ப்ரவீன் குமார் கூறினார்.

என்.எம். இக்பால், கன்னியாகுமரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Lifestyle Marina Beach Water
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment