New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/flu.jpg)
இந்தியாவில் எச்3என்2, கோவிட்-19, என்1என்1 உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. அதிகமானோர் எச்3என்2 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்திய சுகாதரத்துறை தகவலின்படி, 4,263 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 பிப்ரவரி 28 வரையில் 955 பேர் எச்1என்1 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 545 பெர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 170, குஜராத்தில் 74, கேரளா 42, பஞ்சாப் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்3என்2 தொற்றால் , ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் இந்த தொற்றால் மரணடைந்துள்ளனர்.
இந்நிலையில் நம்மை பாதிக்கும் தொற்று எந்த வகை வைரஸால் ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
எச்1என்1 என்ற தொற்றை ஸ்வைன் ப்ளூ என்று அழைப்பார்கள். இது இன்புளூயன்சா போன்ற ஒருவகை வைரஸ்தான், பன்றிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சாதாரணமாக ஏற்படும் சளி மற்றும் இரும்பல் குற்றிப்பிட்ட காலத்தில் ஏற்பட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதுபோன்ற ப்ளூ காய்ச்சலை 300 வெவ்வேறு வகையான வைரஸ் ஏற்படுத்துகிறது. சாதாரணமாக ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் ரினோவைரஸ், இன்புளூயன்சா டைப் ஏ மற்றும் டைப் பி வைரஸ் ஆகியவையால் ஏற்படுகிறது.
கோவிட் 19 தொற்று சார்ஸ் கோவி-2 வைரஸால் ஏற்படுகிறது. இப்போது ஏற்படும் காய்ச்சல், எச்3என்2 வைரஸால் ஏற்படுகிறது. இது தனிக்கவனம் பெற்றுள்ளது.
சிலருக்கு நூரையீரல் பாதிப்பு குறைவாக அல்லது கொஞ்சம் அதிகமாக பாதிப்பு ஏற்படும், எந்த மருந்துகளும் சாப்பிடாமல் சிலர் குணமடைவர், சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்படும்.
கோவிட் மற்றும் ப்ளூ காய்ச்சளுக்கும் வேறுபாடுகள் கண்டறிவது சிரமமான விஷயம்தான், ஆனால் சிலவற்றை நாம் கண்டறியமுடியும்.
என்3என்2 தொற்று ஏற்பட்டால், நாம் பேசும்போது குரல் உடையும், அல்லது பேசுவதில் சிக்கல் ஏற்படும். ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், மற்றும் மூக்கு ஒழுகுதல் ஏற்படும்.
ப்ளூ காய்ச்சலில் உடல் வலி கடுமையாக இருக்கும். மேலும் ப்ளூ காய்ச்சலில் வரட்டு இருமல் ஏற்படும். கிட்டதட்ட 3 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும்.
கொரோனா தொற்றில் வாசனை இழப்பு ஏற்படும். இதனால் எந்த வாசனையும் தெரியாது. இது ப்ளூ காய்ச்சலில் ஏற்படாது.
எப்படி கண்டறிவது ?
கோவிட் 19 மற்றும் எச்1என்1 தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய மூக்கிலிருந்து எடுக்கப்படும் திரவத்தை பரிசோதனை செய்வார்கள். ராபிட் பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.
தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். காய்ச்சல் குறைவதற்கனா மாத்திரைகள் மற்றும் இரும்பல் மருந்து மருத்துவரால் கொடுக்கப்படும்.
வீட்டில் சமைத்த உணவு மற்றும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இன்புளூயன்சா தொற்றுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. இதை நாம் பயன்படுத்த வேண்டும்.
மாஸ்க் அணிவது, காற்று வரும் இருப்பிடங்களில் வாழ்வது, முடிந்தவரை கூட்டமாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளை அதிகமாக எடுக்கக்கூடாது, இந்த தொற்று வைரஸால் ஏற்படுகிறது. இது பாக்டிரியாவால் ஏற்படுவதில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.