amit bhargav tv serial hero vijay tv sun tv hot star - தன் பிள்ளை, தன் வீடு என்பதே நடிகனின் முகமா? - நான் அப்படியில்லை என்பதை நிரூபித்த அமித் பார்கவ்
விஜய் டி.வி-யில் 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் ஹீரோ அமித் பார்கவ் இல்லத்தரசிகளிடம் ஏகத்துக்கும் ஃபேமஸானவர். காரணம், இவரது நல்ல பிள்ளை ஃபேஸ்கட் தான். சாந்தமான குரல், பவ்யமான முகம் என்று சீரியல் பார்க்கும் பெண்களில் குட்புக் லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கிறார் இந்த ஹீரோ.
Advertisment
பலருக்கும் இவரைப் பற்றி தெரியாத ஒரு கேரக்டர் இருக்கிறது. கன்னடத்தில் ஒளிபரப்பான 'சீதே' சீரியலில் அந்த கடவுள் ராமரே நம்ம பார்கவ் தான். தவிர, 2013ல் சன் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரில், கிருஷ்ணராகவும் நடித்திருந்த பார்கவுக்கு, 2014ல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒன்று பாலிவுட்டில் இருந்து வந்தது.
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி
Advertisment
Advertisements
ஷாருக் கான் நடிக்கவிருந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், ஹரீஷ் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க அமித் ஒப்பந்தமானார். அதன் பிறகு, என்னமோ ஏதோ, தல அஜித்தின் என்னை அறிந்தால், எனக்குள் ஒருவன், மிருதன், குற்றம் 23, சார்லி சாப்ளின் 2, கர்ஜனை என்று இவரது சினிமா கால்ஷீட் சிறப்பாகவே சென்றுக் கொண்டிருக்கிறது.
அமித் பார்கவின் மனைவி ஶ்ரீரஞ்சனி, விஜய் டி.வி-யின் தொகுப்பாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. 2016-ம் ஆண்டு இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு, கடந்த மே மாதம் தான் பெண் குழந்தை பிறந்தது.
அன்பான கணவன், தந்தை, நடிகன், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞன் என்று பன்முகம் கொண்டு பிஸியாக வலம் வரும் பார்கவ், சமூகம் தொடர்பான தனது கருத்துகளையும் தைரியமாக பதிவிட்டு வருகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து' என்று கமல்ஹாசன் பேசியதற்கே, நாசூக்காக கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த அமித், பெண்கள் குறித்த பாக்யராஜின் 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது' என்ற சமீபத்திய கருத்துக்கு சற்று ஆக்ரோஷ்மாகவே எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில்,
பொறுப்புணர்ச்சி-க்கு ஆண் பால் பெண் பால் என்ற பிரிவினை வேண்டாம்.
"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது"
பாக்யராஜ் அய்யா, உங்களோட குறுகிய மனப்பான்மையால் சமூகத்தை பின்தங்க வைக்க்காதீர்.
இதற்கு கை தட்டும் கும்பல் வேறே. ச்சை!!
என்று ஓப்பனாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.
பொதுவாக நடிகர்கள் என்றால், எது எப்படியிருந்தா நமக்கென்ன, நம் வேலை நடிப்பது என்றே இருப்பார்கள் என்பது அவர்கள் பற்றிய வெகுஜன மக்களின் பார்வையாகும்.
நான் அப்படி இல்லை.. சரியோ, தவறோ, எனக்கு சமூக பொறுப்பும் இருக்கு என்று வாழும் அமித் பார்கவுக்கு நிச்சயம் ஹேண்ட்ஷேக் கொடுக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news