பெரிய நெல்லிக்காய் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும் என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானது விட்டமின் சி சத்து. நோய் வராமல், பூஞ்ச, நுண்ணுயிறி வராமல் தடுப்பதற்கு இம்யூனிட்டி அதிகரிப்பதற்கு விட்டமின் சி தேவை. அந்த விட்டமின் சி சத்து நெல்லிகாயில் உள்ளது.
இதை அவ்வப்போது சாப்பிட்டு வர வெளியில் இருந்து பயணம் செய்யும் போதோ, இல்லை வெளியில் சென்று விட்டு வரும்போதோ ஏற்படுகிற காற்றில் பரவி வரக் கூடிய நுண்ணுயிறி நம்மை பாதிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது ஏற்படும். இதை தடுக்க செல் இம்யூனியேட்டரி அமிலம் அதிகம் தேவை. அது நெல்லிக்காயில் உள்ளது.
நெல்லிக்கனியை அப்படியே சாப்பிட வேண்டும். ஊறுகாய் செய்து எல்லாம் சாப்பிடக் கூடாது. அதில் நன்மைகளே இல்லை. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நெல்லிக்கனியை நறுக்கி அதில் 2-3 தொட்டு தேன் ஊற்றி கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு அடிக்கடி சளி, இருமல் ஏற்படும். நுரையீரல் சார்ந்த சுவாச குழாய் சார்ந்த பிரச்சனைகள் வரும். அவர்களுக்கு வாரத்திற்கு 2 முறை இந்த நெல்லி தேன் ஊறல் கொடுக்கலாம்" என்று அவர் கூறினார்.