ஹேர் ஸ்பா என்பது உங்கள் தலைமுடிக்கு ஓய்வு அளிக்கும் சிகிச்சை மட்டுமல்ல, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் ஒன்றாகும். ஆனால் சிலருக்கு இது ஒரு விலையுயர்ந்ததாகத் தோன்றலாம்.
எனவே, நீங்கள் மாற்று வழியைத் தேடுகிறீர்களானால், பியூட்டி பிளாகர் பாவனா மெஹ்ரா சமீபத்தில் ஹேர் மாஸ்க் செய்முறையைப் பகிர்ந்துள்ளார்,
உங்கள் ஹேர் ஸ்பா தேவைகளை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி பொடிகள் உங்கள் தலைமுடிக்கு அதியசங்களை செய்யும்.
இந்த மூன்றும்"முடி பராமரிப்புக்கான கனவுக் குழுவை" உருவாக்குகிறது.
நெல்லியில் வைட்டமின் சி உள்ளது, இது முடி வளர்ச்சிக்கு சிறந்தது. கரிசலாங்கண்ணி கூந்தலுக்கான ஆயுர்வேத மூலிகைகளின் ராஜாவைப் போன்றது, மேலும் செம்பருத்தி உங்கள் தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும், என்று மெஹ்ரா மேலும் கூறினார்.
ஹேர் மாஸ்க் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் – நெல்லி பொடி
1 ஸ்பூன் - கரிசலாங்கண்ணி
1 ஸ்பூன் - செம்பருத்தி பொடி
ஊறவைத்த வெந்தய தண்ணீர்
2-3 நாட்களுக்கு செப்புப் பாத்திரங்களில் சேமித்த தயிர்
எப்படி செய்வது?
சிறிதளவு தண்ணீரில் சம அளவு பொடிகளை கலக்கவும். கலவையில் தயிர் அல்லது வெந்தயம் தண்ணீர் சேர்க்கவும்.
வீட்டில் ஒரு மினி ஸ்பா சிகிச்சைக்காக ஊற வைத்த வெந்தய நீர் அல்லது 2-3 நாட்களுக்கு செம்புப் பாத்திரத்தில் சேமித்த புளித்த தயிரைப் பயன்படுத்த நான் அறிவுறுத்துகிறேன். இது வேலை செய்கிறது. என் தலைமுடி வலுவாகவும், பளபளப்பாகவும் தெரிகிறது, என்று மெஹ்ரா கூறினார்.
ஹேர் மாஸ்க் செயல்திறனைப் பற்றி மேலும் அறிய, நாங்கள் தோல் மருத்துவர்களை அணுகினோம்.
நெல்லிக்காய், செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, மற்றும் வெந்தயம் போன்ற இயற்கைப் பொருட்களை முடி பராமரிப்புக்காக இணைப்பது பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளில் வேர்களைக் கொண்டுள்ளது.
இந்த பொருட்கள் ஒவ்வொன்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது, பொடுகைத் தடுப்பது, ஹேர் ஃபாலிக்கிள்ஸை வலுப்படுத்துவது மற்றும் பளபளப்பைச் சேர்ப்பது போன்ற பல்வேறு நன்மைகளை முடி ஆரோக்கியத்திற்கு வழங்குவதாக நம்பப்படுகிறது.
இருப்பினும், வல்லுநர்கள் அவற்றின் செயல்திறன் நபருக்கு நபர் மாறுபடும் மற்றும் எல்லா நிகழ்வுகளிலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாமல் போகலாம் என்று தெரிவிக்கின்றனர்.
/indian-express-tamil/media/media_files/9JibBmlSfjbu5g0eu5M4.jpg)
நெல்லியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஹேர் ஃபாலிக்கிள்ஸை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும், முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கவும் உதவும். செம்பருத்தி அதன் கண்டிஷனிங் பண்புகளுக்காக அறியப்படுகிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
கரிசலாங்கண்ணி முடி உதிர்தலைத் தடுக்கவும், முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, என்று டாக்டர் ரிங்கி கபூர் (consultant dermatologist, cosmetic dermatologist, and dermato-surgeon, The Esthetic Clinics) கூறினார்.
க்லிப்டா ஆல்பா என்றும் அழைக்கப்படும் பிரிங்ராஜ், நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத மூலிகையாகும், இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்கிறது, என்று டாக்டர் ஷரீஃபா சாஸ் (dermatologist and cosmetologist, Shareefa’s Skin Care Clinic) பகிர்ந்து கொண்டார்.
வெந்தய விதைகளில் புரோட்டீன்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளது, இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது, ஹேர் ஃபாலிக்கிள்ஸை வலுப்படுத்துகிறது மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுக்கிறது, என்று டாக்டர் கபூர் கூறினார்.
இந்த பொருட்களைக் கலந்து ஒரு சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க் அல்லது எண்ணெய் தயாரிக்கலாம், இதை உச்சந்தலையிலும் முடியிலும் பயன்படுத்தலாம். இருப்பினும், டாக்டர் கபூரின் கூற்றுப்படி, காப்பர்வேர் செட் தயிர் சேர்த்துது நன்மைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு காப்பர் இன்றியமையாதது மற்றும் சில ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கலாம் என்றாலும், முடி பராமரிப்பில் அதன் பங்கு நன்கு நிறுவப்படவில்லை. இதேபோல், தயிர் அதன் கண்டிஷனிங் பண்புகளுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது,
ஆனால் முடி ஆரோக்கியத்திற்கான இந்த குறிப்பிட்ட பொருட்களுடன் இணைந்து அதன் செயல்திறன் விரிவாக ஆய்வு செய்யப்படவில்லை, என்று டாக்டர் கபூர் கூறினார்.
டாக்டர் சாஸ் கூறுகையில், சிலருக்கு இந்த கலவையானது முடியை கழுவிய பின் வறட்சியை உண்டாக்கும். அத்தகைய சூழ்நிலையில், குறிப்பாக உங்கள் தலைமுடி வறண்டு இருக்கும் போது, நீங்கள் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும், என்றார்.
Read In English: Do amla, bhringraj, and hibiscus make for a ‘dream team for hair care’?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“