வெயில் காலங்களில் ஐஸ்கிரீம், சர்பத், குல்ஃபி ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து கொண்டிருக்கிறோம். இவற்றை ஃப்ரிட்ஜிலேயே நிறைய ஸ்டாக் செய்தும் வைத்திருப்போம்.
ஆனால் கோடை வெப்பம், உங்கள் சருமத்தை மிகவும் பாதித்திருக்கும். வெயில் கொடுமையில் இருந்து நீங்கள் எளிதாக உங்களை காத்துக்கொள்ள முடியும். கோடை காலத்தில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதும். சருமம் சிறப்பாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிய நெல்லிக்காய் என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை வளர செய்யும். சருமத்தை ஒளிர செய்யும் தன்மை பெரிய நெல்லிக்கு உண்டு. இதில் வைட்டமின் சி உள்ளதால், சருமத்தின் சோர்வை போக்கி, நீண்ட ஆயுளை தருகிறது.
இதனை கொண்டு ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். இதை தயாரிப்பது மிகவும் எளிமையானது. நெல்லிக்காயை கொட்டை நீக்கி அரைத்து அதில் தேன் சேர்த்து குடிக்கலாம். தேனில் ஆன்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சரும பாதிப்புகளை போக்கிவிடும். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் இந்த நெல்லி மிகச் சிறந்தது. நெல்லிக்காய் சாறு எடுத்து இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். ஆனாலும் இதனை அருந்துவதுதான் நல்லது.
நெல்லிக்காய் ஜூஸ்
5 முதல் 7 நெல்லிக்காயை நன்கு கழுவி வெட்டி கொள்ளவும்.
மிக்ஸியில் வெட்டி வைத்த நெல்லிக்காய் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
அதனை வடிகட்டி கொள்ளவும். பின், அதில் தேன் சேர்த்து கலந்து குடித்து வரலாம். தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.