வெறும் வயிற்றில் நெல்லிகாய் ஜூஸ் குடித்தால் அதிக நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, நார்சத்து உள்ளது. இது உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கும்.
இதில் வைட்டமின் சி உள்ளது. இது ஒரு ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படும். காலையில் நெல்லிக்காய் சாறை வெறும் வயிற்றில் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் இருப்பதால், உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். தொடர்ந்து நெல்லிக்காய் சாறை குடித்து வந்தால் மூட்டு வலி மற்றும் விக்கம் குறைய வாய்ப்புள்ளது.
கியாஸ்டிக் ஜூஸை சுரக்க உதவுகிறது. இதனால் தேவையான சத்துகளை உணவில் இருந்து எடுத்துகொள்ள உதவுகிறது. அஜீரணத்தை, மலச்சிக்கல் ஆகியவற்றை தடுக்கிறது.
இது ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுவதால், உடல் எடை குறைய உதவுகிறது.
இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். மேலும் சுகர் நோய் வரும் சாத்தியங்கள் இருக்கும் நபர்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.
இதில் உள்ள அதிக நார்சத்து அளவு மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் பாலிபினால்ஸ், கொலஸ்டரால் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால் இதய நோய் ஏற்படாது.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை குடிப்பதால், உடலில் உள்ள நச்சு பொருட்களை வெறியேற்றும். மேலும் இதனால் தெளிவான சருமம் கிடைக்கும்.
இதில் வைட்டமின் ஏ உள்ளதால், கண் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் வயதாவதால் ஏற்படும் கண் தொடர்பான சிக்கல் குறையும். இதில் உள்ள அடாப்டோஜெனிக் தன்மைகள், மன அழுத்தத்தை குறைக்கும். மனதளவில் தெளிவான நிலையை கொடுக்கும். உடல் மற்றும் மன ரீதியான அழுத்தத்திற்கு எதிராக உடலின் எதிர்வினைகளை அதிகப்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“