இனி நெல்லிக்காய் ஊறுகாய், இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
15 நெல்லிக்காய்
15 பூண்டு
2 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் வெந்தயம்
கால் கப் எண்ணெய் ‘
2 ஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு
அரை ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை : நெல்லிக்காய்யை விதை எடுத்துவிட்டு, நீளமாக நறுக்க வேண்டும். பூண்டை தோல் உரித்து, அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து கொள்ளவும். இதை தனியாக அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நெல்லிக்காய்யை சேர்த்து வதக்க வேண்டும். இது நன்றாக வதங்கியதும். பெருங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அடுப்பை அணைத்துவிட்டு, கடுகு – வெந்தயம் பொடி செய்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் பொடியை சேர்த்து கிளரவும். நன்றாக கிளறிய பிறகு அடுப்பை ஆன் செய்யவும். தொடர்ந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“