நடிகை அம்மு அபிராமி சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த படங்கள் மற்றும் அங்கு அருவியில் ரசித்த போது எடுத்த வீடியோஸை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
வானுயர்ந்த மலைகள், பரந்த தேயிலைத் தோட்டங்கள், கன்னி காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏராளமான இயற்கை அழகுக்காக சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் சொர்க்க மலை வாசஸ்தலம்...
இடுக்கி மாவட்டம் மூணாறில் ஆண்டின் பல மாதங்கள் குளிர், பனி போன்றவற்றுடன் சாரல் மழையும் பெய்வதால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்தியது போல இருக்கிறது.
மழைக்காலங்களில் இப்பகுதி மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. மூணாறில் அதிகமாக நம் கண்களைக் கொள்ளைகொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். இங்கு திடீர் திடீரென கிளைமேட் மாறி விடுவது அதன் அதிசயத்தக்க அம்சம்.
மூணாறில், இறவிக்குளம் தேசிய பூங்கா, அட்டுக்காடு நீர்வீழ்ச்சிகள் மாட்டுப்பட்டி அணை, நியமக்கடா எஸ்டேட், எக்கோ பாயிண்ட் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். மூணாறு யானைச் சவாரி மிகவும் பிரபலம். சின்னாறு ட்ரெக்கிங் பாயிண்ட், சந்தன மரக்காடு, செங்குளம் போட்டிங், குந்தளா, லக்கோம் நீர்வீழ்ச்சி போன்றவை மூணாறில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்.
இந்த பரந்து விரிந்த அற்புதமான தேயிலைத் தோட்டங்கள் உங்களுக்கு நீங்கா நினைவுகளை தரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“