amritha aiyer instagram bigil thendral : இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி நடிப்பில் கடந்த தீபவளிக்கு வெளியாகியது பிகில் திரைப்படம். கால்பந்து விளையாட்டு, பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் தென்றல் இந்த பெயரை கேட்டாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுவார்கள்.
Advertisment
பிகில் படத்தில் கால்பந்து அணியில் பல்வேறு பெண்கள் நடித்திருந்தனர். இதில் அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அமிர்தா அய்யர். பிகில் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை அமிர்தா அய்யர் இதற்கு முன்னரும் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இதெற்கு முன்னர் விஜய்யின் தெறி படத்திலும், விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அமிர்தா ஐய்யர்.
பிகில் படத்தில் சிங்கபெண்ணாக நடித்த அமிர்தாவின் சில கலக்கலான மாடர்ன் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கம். இப்படத்திற்கு முன்பு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை. பிகில் திரைப்படத்திற்கு பிறகு தான் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.
தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிள்ளது அதிலும் முக்கியமாக இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் நடிகை அமிர்தா ஐயர்.
இவரின் ஹோம்லி புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news