amy jackson baby shower images : எமி ஜாக்சன் கர்ப்பம் என்பது எல்லாம் பழைய நியூஸ். அவரை பற்றி வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? எமிக்கு 9 ஆவது மாதம் வளைக்காப்பு பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
சர்ச்சைகள் வெடித்தாலும் எதையுமே கண்டுக் கொள்ளாலாம் தனது வழியில் ஜாலியாக சென்றுக் கொண்டிருக்கும் எமிக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற போகிறது. ஆனால் இந்த வருடமே வளைகாப்பு நடந்து முடிந்தது.
எமிக்கும் அவரது வருங்கால கணவர் ஜார்ஜ் பனாயோட்டாவுக்கும் சில மாதங்கள் முன்பு தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் அதற்கு முன்பே தான் கார்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார் எமி. தனது கர்ப்ப காலத்தை வித்யாசமாகவும் ஆரோக்கியமாகவும் கொண்டாடி வருகிறார் அவர். 5 வார கர்ப்பம் தொடங்கி தற்போது 35 ஆவது வார கர்ப்ப காலத்தில் இருக்கும் அவர் தொடர்ந்து தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லை மற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குறிப்புகளையும் வழங்கி வருகிறார்.
சமீபத்தில் வெளியிட்டிருந்த யோகா படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் எமியின் கணவர் ஜார்ஜ் பனாயோட்டா சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வளைக்காப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். அந்த புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார். இன்றைய ஃபோட்டோ கேலரியில் அந்த புகைப்படங்களை தான் பார்க்க போகிறோம்.
1. நீல நிறத்தில் அவரின் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எமி மட்டுமில்லை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் நீல நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-52.jpg)
2. விழாவில் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எமி. வளைகாப்பு நிகழ்வு கனவு போல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-55.jpg)
3. பிறக்க போவது ஆண் குழந்தை என்பதை குறிக்கும் வகையில் எனது ஆண் குழந்தையை நல்ல நண்பர்கள் மற்றும் சிறந்த குடும்பத்தினருடன் கொண்டாடும் அழகான பிற்பகல் இது என பதிவிட்டிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-87.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-88.jpg)
4.நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக தெரிவித்திருந்தார். வண்ண பலூன்கள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் நின்று எமி ஜாக்சன் போஸ் கொடுத்தார்.
5. /tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-54.jpg)
தாய்மை என்றாலே அழகு என்பது போல் எமிஜாக்சன் இந்த புகைப்படங்களில் வழக்கத்தை விட கூடுதல் அழகாக ஜொலிக்கிறார்.