சமீரா ரெட்டி முதல் எமி ஜாக்சன் வரை.. தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகைகள் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்!

ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

amy jackson baby : தாய்மை..பெண்கள் வாழ்க்கையில் அது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் காலமாக பிரவச காலம் உள்ளது. தனது குழந்தையை அம்மாவை தவிர வேறு யாராலும் இவ்வளவு ஸ்பெஷலாக பார்த்துக் கொள்ள முடியாது.

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் பல்வேறு காரணங்களால் பிறந்த குழந்தையை 6 மாதத்தில் பிரியும் நிலைக்கு ஆளாகிறார்கள். தாய்ப்பால் பிரச்சனை தொடங்கி நேரம் செலவிடுதல் வரை அவர்களின் வாழ்க்கை ஓட்டம் மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா துறையில் பிஸியான வாழ்க்கையிலும் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகைகளாக சமீரா ரெட்டி, எமி ஜாக்சன், சரண்யா மோகன் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அதிலும் இவர்கள் கர்பகாலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் போன்றவையும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இதுத் தொடர்பான ஸ்பெஷல் கேலரியை தான் இன்று பார்க்க போகிறோம்.

1. சமீரா ரெட்டி:

2014 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியான நடிகையாக இருந்த போதே அவர் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பின்பு முழு நேரமாக தனது கணவர் மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்வதில் பிஸியானார். 4 வருடங்களுக்கு பிறகு சமீரா மீண்டும் தாயானர். இதுக் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

2. எமி ஜாக்சன்:

லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் சில படங்களை நடித்து விட்டு நடிப்புக்கு பாய் சொல்லி விட்டார். தனது காதலருடன் லண்டனில் செட்டில் ஆன எமி, சமீபத்தில் கர்ப்பமானர். அவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. கர்பகாலத்தில் எமி பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தாய்ப்பால் முக்கியத்துவம், கர்ப்பகால உடற்பயிற்சி என எமியின் அனைத்து புகைப்படங்களும் வைரல் தான்.

3. சரண்யா மோகன்:

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா மோகன் 2 குழந்தைகளுக்கு தாயான பின்பு தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அவரின் உடல் மாற்றம் குறித்து நெட்டிசன்கள் கேலி செய்தனர். அதற்கு தகுந்த பதில் அளிக்கும் வகையில் “நான் 2 குழந்தைகளுக்கு தாய் என்பதில் பெருமிதம் மட்டுமே அசிங்கம் இல்லை” என்று கூறினார்.

4. நடிகை பானு:

தமிழ் சினிமாவில் மலையாள இறக்குமதியாக அறிமுகமான பானு விஷால், விமல் உடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். சமீபத்தில் ராதிகா உடன் சன் டிவி சீரியலிலும் இணைந்து நடித்தார்.  ஒரு குழந்தைக்கு தாயான பின்பு பானு சினிமா வேலைகளிலும் கவனம் செலுத்திக் கொண்டு தனது குழந்தையை கவனித்து வருகிறார்.

5. நடிகை ரம்பா:

சார் ரம்பா சார்..  ஒரு காலத்தில் ரம்பாவிற்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் என்பது கணக்கிட முடியாத ஒன்று. இன்று அவர் 3 பிள்ளைகளுக்கு தாய். சினிமாவுக்கு முழு நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு தனது குழந்தைகளை பராமரித்துக் கொள்கிறார் ரம்பா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close