இஞ்சியின் தனித்துவமான சுவையை நீங்கள் விரும்பினால், அதை அடிக்கடி உங்கள் உணவு மற்றும் தேநீரில் சேர்த்துக் கொண்டால், இன்று உங்களுக்காக நாங்கள் சேமித்து வைத்திருப்பதை நீங்கள் விரும்புவீர்கள்.
பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக அறியப்பட்ட இஞ்சியை, பச்சையாகவும் சமைத்ததாகவும், மேலும் தோலுரித்து அல்லது உரிக்கப்படாமல் என எண்ணற்ற வழிகளில் உட்கொள்ளலாம்.
ஆனால் இஞ்சியில் உள்ள அனைத்து சத்துக்களும் நீங்காமல், அதன் தோலை உரிக்க சரியான வழி இருக்கிறதா?
ஒரு பீலர் அல்லது கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்பூனின் பின்புறத்தைப் பயன்படுத்த செஃப் பரிந்துரைத்தார்.
சமூக ஊடகப் பதிவில், ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிஞர் ஒருவர் இஞ்சியை அதன் தோலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் பல நன்மைகள் உள்ளன. "இஞ்சி இயற்கையின் அழகான பரிசு, நம்மில் பெரும்பாலோர் அதை தவறாக தோலுரிக்கிறோம். மேலும், நாம் எப்படியும் அதை உரிக்கக்கூடாது! இஞ்சித் தோல் உண்ணக்கூடியது. இதன் சதையில் 2X நன்மை பயக்கும் பாலிபினால்களைக் கொண்டுள்ளது. முக்கியமான மற்றும் தனித்துவமான கலவைகள் இதில் உள்ளன என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பயோமெடிசினில் பிஎச்டி, இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனில் இருந்து ஹெல்த் கோச்சிங் சான்றிதழ் வைத்திருக்கும் கஞ்சன் கோயா கூறினார்.
இருப்பினும், நீங்கள் இன்னும் அதை உரிக்க விரும்பினால், ஒரு கரண்டியின் பின்புறத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார்.
“எங்கள் பிரியமான இந்திய உணவுகளைப் போலவே சில சமையல் குறிப்புகளும் நார்ச்சத்துள்ள தோலுடன் வித்தியாசமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். அப்படியானால், உங்கள் இஞ்சியை உரிக்க ஒரு ஸ்பூனைப் பயன்படுத்துங்கள், அதனால் நீங்கள் சதையை உரிப்பதில்லை. உங்களால் முடிந்தால், தேநீர் மற்றும் குழம்பு போன்றவற்றில் இஞ்சித் தோலை சேர்த்து நன்மைகளை அனுபவிக்கவும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஃபிட்சாவின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கருத்துப்படி, இஞ்சியை கத்தியால் உரிக்கும்போது, இஞ்சியின் அளவு வீணாகிவிடுவதால், ஆரோக்கியமான பல கூறுகள் இழக்கப்படுகின்றன.
“இஞ்சி எவ்வளவு வளைவாக இருக்கிறதோ, அவ்வளவு கடினமாக கத்தியால் உரிக்க வேண்டும். நீங்கள் உரிக்க அதிக நேரம் எடுக்கும் போது, இஞ்சி கூழின் மேற்பரப்பு ஆக்ஸிஜனேற்றம் தொடங்கி அதன் நன்மைகளை இழக்கத் தொடங்குகிறது.
கரண்டியை பயன்படுத்துவதால், விரைவாகவும் திறமையாகவும் இஞ்சியின் தோலை உரிக்கலாம். இது ஊட்டச்சத்துக்களை உள்ளே சேமிக்க உதவும் என்று அவர் கூறினார்.
ஆயுர்வேத பயிற்சியாளர் மருத்துவர் டிக்சா பாவ்ஸரின் கூற்றுப்படி, இஞ்சியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை;
* தொண்டையை ஆற்றும்.
*சோம்பலை நீக்கும்.
* தொப்பை கொழுப்பை எரிக்கும்.
* வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்கும்.
* செரிமானத்தை அதிகரிக்கும்.
* வீக்கம் குறையும்.
*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
மருத்துவர் பாவ்ஸர் பரிந்திரைத்த ஸ்பெஷல் இஞ்சி டீ செய்முறை கீழே
தேவையான பொருட்கள்
இஞ்சி – சிறிதளவு (வெட்டியது அல்லது இடித்தது)
1 கிளாஸ் - தண்ணீர்
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை
*இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
* எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*தேநீர் அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு தேன் சேர்க்கவும்; சூடாக இருக்கும் போது அல்ல.
“இஞ்சி ஆற்றல் மிகுந்ததாக இருப்பதால், இரத்தப்போக்கு கோளாறு மற்றும் அதிகப்படியான பித்தம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் கொத்தமல்லி பயன்படுத்தலாம்” என்று மருத்துவர் பாவ்சர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.