அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், வாரத்திற்கு 2 கப் கோகர்ட் சாப்பிடும் நபர்களுக்கு, சர்க்கரை நோய் ஏற்படும் சாத்தியம் குறைவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தகவல் ஒன்று புதிதல்ல என்றும். ஹாவர்ட்டு ஸ்கூல் பொது சுகாதாரம், நடைபெற்ற ஆய்வில் தினமும் தயிர் சாப்பிட்டால், 18% சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்டிரேலியாவில் நடைபெற்ற ஆய்வில், கொழுப்பு சத்து உள்ள பால் பொருட்களை சாப்பிடும்போது, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயங்கள் குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
யோகர்டில் கால்சியம், வைட்டமின் பி, மெக்னிஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம் உள்ளது. பாலில் இருந்து புளிக்கவைக்கப்பட்டு உள்ளதால், இதில் ப்ரோபயாட்டிக்ஸ் வீக்கத்திற்கு எதிராகவும், இன்சுலின் செயல்பாட்டை உடல் உள்வாங்கிக்கொள்ள உதவும்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், பால் பொருட்களில் உள்ள முழு கொழுப்பு சத்து, இதய நோய்களை மற்றும் பக்கவாதம் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுவாக தயிரை நாம் செய்யும்போது பாலில் வினிகர், அல்லது எலுமிச்சை சாறு ஊற்றி நாம் தயிரை செய்வோம். ஆனால் யோகர்ட் என்பது பாக்டிரியாவின் ஸ்டெயின் ஆனா லாக்டோபாசிலஸ் பல்ஹாரிகஸ் மற்றும் ஸ்டெப்டோகாக்கஸ் தர்மோபிலஸ் ஆகியவற்றை சேர்ப்பதால் வருகிறது.
இந்தியாவில் எறுமைப்பாலைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். இந்நிலையில் இதனால் நம்மூரில் உள்ள தயிருக்கும், வெளிநாடுகளின் யோகர்ட் வித்தியாசங்கள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“