இன்றைய சமூகவலைத்தளங்கள் ஒரே நைட்டில் ஓபாமா ஆவது எப்படி என்பதை நமக்கு ஈஸியாக கற்றுத் தருகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் இவர்களின் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் வெளியானதால் இவர்கள் எல்லாருமே ஒரு நாளில் உலகம் அறிந்தவர்களாக மாறிப்போனவர்கள்.
யாருன்னு தெரியலையா?, அட நாம் ஜிமிக்கி கம்மல் ஷெரீல், பாகிஸ்தான் டீ கடைக்கார பையன், டப்மேஷ் மிருணானிளி இப்படி வரிசையா சொல்லலாம். இவர்கள் எல்லோருமே அவர்களாக ஃபோட்டோ, வீடியோ போட்டு புகழை அடைந்தனர். ஆனால். ஹரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளியை அவருக்கே தெரியாமல் எடுத்த புகைப்படம் ஒன்று அவருக்கு மாபெரும் புகழை தேடி தந்திருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மகிந்த்ரா நிறுவன அதிபர் ஆனந்த் மகிந்த்ரா தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தன்னை மிகவும் கவர்ந்த புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் பற்றி தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று, புகைப்படத்தில் இருக்கும் நபர் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இருக்க வேண்டியவர் என்று ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்திருந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளே அந்த புகைப்படம் வைரலானது. யார் அவர்? எங்கே இருக்கிறார்? என்று சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை தேட ஆரம்பித்தனர். மேலும், சிலர், அவர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தின் பின்னால் இருந்த வரியை உற்றி நோக்கி மொழிப்பெயர்ப்பும் செய்திருந்தனர்.
அதில், “ இங்கே காயமடைந்த ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும். பார்வை நேரம் காலை 9 மணி முதல் 1 மணி வரை. லஞ்ச் டைம் 1 முதல் 2 மணி வரை. மீண்டும் 2 முதல் மாலை 6 மணி வரை ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும். டாக்டர்.நரசிம்மன். ஜெர்மன் தொழில்நுட்பம் இங்கே கையாளப்படுகிறது. நோயாளிகள்(ஷூக்கள்) பொறுமை காக்கவும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
,
இந்த மார்க்கெட்டிங் டெக்னிக் தான் ஆனந்த் மகிந்த்ராவை அட்டராக் பண்ணியுள்ளது என்ற உண்மை பலருக்கும் தெரிய வந்தது. அதன் பின்பு, அவரின் சகாக்கள் ஹரியானா விரைந்தனர். செருப்பு தொழிலாளி (மருத்துவர்) நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இவை எல்லாவற்றையும் கேட்ட, நரசிம்மனின் ரியாக்ஷன் என்ன தெரியுமா? ”ஓ அப்படியா சரி”... பின்பு அவர்கள் நரசிம்மனிடம் பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
,
நரசிம்மனின் இந்த நேர்மை மீண்டும் ஆனந்த் மகிந்த்ராவை கவர, ”அடிச்சான் பார் அப்பாயிண்மெண்ட் ஆடர ”என்பது போல், மும்பை டிசைன் ஸ்டூடியோ நிறுவனம் வழியாக நரசிம்மனுக்கு புதிய செருப்பு கடை வைத்து கொடுக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.