இவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா! சின்னத்திரை ஆனந்தி பெஸ்ட் மொமண்ட்ஸ்

ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அவர் கலக்கிய நடனங்கள் இன்று வரை யுடியூபில் பலராலும் தேடி பார்க்கப்படுகிறது.

By: Updated: January 19, 2021, 01:13:30 PM

anandhi husband vj anandhi husband : சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம் பிரபல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி ஜே ஆனந்தி. அதன் பிறகு இவர் ஸ்ரீலங்கா சேனலில் கார்த்திகை பெண்கள் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானார்.விஜய் டிவியில் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து நன்கு பிரபலம் அடைந்தார். நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் 7 மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 6 ஆகிய நடனப் போட்டியில் பங்கேற்றார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய சினிமா கனவை தொடர்ந்து கவனித்து வருகிறார். ஆனந்தி ஆர்யாவின் மீகாமன், ஜீவாவுன் ரெளத்திரம் படங்களில் நடித்து இருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகு ஆனந்தி தனது உடலை கடுமையாக குறைத்து மற்ற பெண்களுக்கு எனர்ஜி அண்ட் பாசிடிவ் வைபரேஷனை தந்தார். தனது மகனுடன் நாள் முழுவதையும் செலவு செய்யும் ஆனந்தி, சினிமா ஷூட்டிக்கும் செல்ல மகனை அழைத்து செல்வார். நனடத்தில் ஆனந்தியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அவர் கலக்கிய நடனங்கள் இன்று வரை யுடியூபில் பலராலும் தேடி பார்க்கப்படுகிறது.

ஆனந்தியின் கனவர் அஜய் மற்றும் நடிகர் ஆர்யா சமூகவலைதளத்தில் நல்ல நண்பர்களாம். தனது குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று அஜய்ஆரியாவிடம் கேட்டுக் கொண்டார்.இதற்கு ஆர்யாவும்மறுக்காமல்பெயர் வைக்கும் விழாவில் கலந்துகொண்டு குழந்தைக்கு ’ஆர்யவீர்’ என்று பெயர் வைத்துள்ளார்.இதை எல்லா மேடையிலும் பூரிப்புடன் ஆன்ந்தி பகிர்ந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Anandhi husband vj anandhi husband serial artist anandhi instagram vj anandhi dance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X