Advertisment

110 மணி நேரம், ஒரிஜினல் தங்கம், பிச்வாய் ஆர்ட்வொர்க்: அனந்த் அம்பானி திருமண ஜாக்கெட்ல இவ்ளோ விஷயம் இருக்கா?

மணீஷ் மல்ஹோத்ராவின் கையால் வர்ணம் பூசப்பட்ட சிவப்பு நிற பெஸ்போக் பூண்டி ஜாக்கெட்டில், ஆனந்த் அம்பானி தனது திருமண விழாவில் ராஜரீகமாகத் தோன்றினார்.

author-image
WebDesk
New Update
Ambani wedding,

Anant Ambani’s Bundi jacket was painted by ‘3 pichwai artists in 110 hours using 100 real gold leaves’

பந்தனி முதல் கஷீதா வரை, பிச்வாய் முதல் ஜர்தோசி வரை அம்பானி திருமணம் உலகளவில் பேஷன் ஆர்வலர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது.

Advertisment

மணீஷ் மல்ஹோத்ராவின் கையால் வர்ணம் பூசப்பட்ட சிவப்பு நிற பெஸ்போக் பூண்டி ஜாக்கெட்டில், ஆனந்த் அம்பானி தனது திருமண விழாவில் ராஜரீகமாகத் தோன்றினார்.

ராஜஸ்தானில் உள்ள நாததுவாரா கோவிலின் பழமையான பிச்சுவாய் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஜாக்கெட், தாமரைகள், மரங்கள், பசுக்கள் மற்றும் மயில்கள் போன்ற மோட்டிஃப்ஸ் உடன் பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையை சித்தரித்தது.

பில்வாரா கைவினைஞர்களால் 600 மணி நேரத்திற்கும் மேலாக உருவாக்கப்பட்டது, 100 தங்க இலைகளைப் பயன்படுத்தி 110 மணி நேரத்தில் மூன்று நிபுணத்துவம் வாய்ந்த பிச்சுவாய் கலைஞர்களால் வர்ணம் பூசப்பட்டது, என்று டிசைனர் மல்ஹோத்ரா இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.

மணமகனின் தாய் நிதா அம்பானி அணிந்திருந்த அழகான இளஞ்சிவப்பு நிற சார்பாக் புடவையும் பலரை கவர்ந்தது, ரங்காட் டெக்னிக்ஸ் பயன்படுத்தி, பல்வேறு வண்ணங்களில் சிக்கலான மீனா வேலைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த புடவைக்கு அவரது பர்பிள் பிளவுஸ் கூடுதல் அழகை சேர்த்தது.

ராஜஸ்தானின் கிஷன்கரைச் சேர்ந்த பிச்வாய் கலைஞர் ஷெஹ்சாத் அலி பிரத்யேகமாக டிசைன் செய்த இந்த பிளவுஸ் ஒரிஜினல் தங்க வராக் வேலைகளால் அலங்கரிக்கப்பட்டது.

இந்த நேர்த்தியான கலை வடிவத்தைப் பற்றி மேலும் அறிய, ராஜன் ஸ்ரீபாத் ஃபுலாரியிடம் பேசினோம். (Dean, School of Visual Arts, World University of Design (WUD) to learn more about this exquisite art form)

பிச்வாய் ஆர்ட்வொர்க்

பிச்வாய் ஓவியம் என்பது ராஜஸ்தானில் உள்ள நாததுவாராவில் இருந்து உருவான ஒரு பாரம்பரிய இந்திய கலை வடிவமாகும், இது முதன்மையாக பகவான் கிருஷ்ணரின் வழிபாட்டுடன் தொடர்புடையது. இந்த சிக்கலான ஓவியங்கள் பொதுவாக துணியில் செய்யப்படுகின்றன மற்றும் கோயில் தொங்கல்களாக (temple hangings) பயன்படுத்தப்படுகின்றன.

இந்து மதத்தின் புஷ்டிமார்க் பிரிவைப் பின்பற்றுபவர்களுக்கான ஒரு முக்கிய யாத்திரைத் தளமான நாததுவாராவில் பாரம்பரியம் தொடங்கிய 17 ஆம் நூற்றாண்டில் பிச்வாய் ஓவியங்களின் வரலாறு தொடங்குகிறது.

இந்த ஓவியங்கள் ஆரம்பத்தில் கோயில் கலைஞர்களால் கிருஷ்ணரின் வாழ்க்கையின் கதைகளை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டன.

காலப்போக்கில், பாரம்பரியம் உருவானது, கலைஞர்கள் தங்கள் திறமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தனர், இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான தொடுதலைச் சேர்ப்பதன் மூலம் முக்கிய கூறுகளைப் பாதுகாக்கிறார்கள், என்று ராஜன் ஸ்ரீபாத் கூறினார்.

பிச்வாய் கலையில் என்ன ஸ்பெஷல்?

சிக்கலான விவரங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்கள் தான் பிச்வாய் ஓவியங்களை தனித்துவமாக்குகிறது.

கிருஷ்ணர் இடம்பெறும் விரிவான காட்சிகளை உருவாக்க இந்த கலை வடிவமானது, கோபிகள், பசுக்கள், தாமரைகள் மற்றும் அவரது தெய்வீக லீலைகளால் சூழப்பட்டிருக்கும் துல்லியமான பிரஷ்வொர்க்கை உள்ளடக்கியது.

சில அம்சங்களை ஹைலைட் ஆக காட்ட தங்கம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, இது ஓவியங்களுக்கு செழுமையான தோற்றத்தை அளிக்கிறது.

இந்த தீம் மத அடையாளங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன, ஒவ்வொரு பகுதியையும் பார்வைக்கு அழகாக மட்டுமல்லாமல் ஆன்மீக அனுபவமாகவும் ஆக்குகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

Read in English: Anant Ambani’s Bundi jacket was painted by ‘3 pichwai artists in 110 hours using 100 real gold leaves’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment