/indian-express-tamil/media/media_files/m3XJ4GwNtb27MDW0MnNW.jpg)
Rashmika Mandanna
சனிக்கிழமை அன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமண வரவேற்பு நிகழ்வில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதில் ராஷ்மிகா மந்தனா கிளாமரஸ் அஜ்ரக் புடவையில் வந்தார்.
டிரெடிஷனல் ஜியோமெட்ரிக் பாட்டர்ன் கொண்ட சீக்வின்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த அற்புதமான ராயல் ப்ளூ புடவை ஒரு மெஸ்மெரிசிங் எஃபக்ட் கொடுத்தது. இதன் விலை ரூ. 1,28,000.
ராஷ்மிகா அணிந்த நீலக்கல் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான நெக்லஸ் அவரது புடவையின் வண்ணங்களை முழுமையாக பூர்த்தி செய்தது. டெய்ன்டி ஈயரிங்ஸ், வளையல்கள், ஒரு ஸ்டேட்மென்ட் மோதிரத்துடன் தனது ஒட்டுமொத்த தோற்றத்தை ராஷ்மிகா உயர்த்தினார்.
மஸ்காரா மற்றும் நன்கு கட்டப்பட்ட கூந்தலில் மென்மையான கஜ்ரா உடன் ராஷ்மிகா தோற்றத்துக்கு ஃபைனல் டச் கொடுத்தார்.
ராஷ்மிகா, தற்போது ‘புஷ்பா 2’, ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.