/indian-express-tamil/media/media_files/qRlvYUVjCKMoabqiFNag.jpg)
Radhika Merchant
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயமானது.
ஆனந்த் அம்பானி கடந்த 1995ம் ஆண்டில் பிறந்தவர். தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார்.
ராதிகா மெர்ச்சன்ட் 1994ம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை வீரேன் மெர்ச்சன்ட், பிரபல மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ராதிகா மெர்ச்சன்ட் தி கதீட்ரல், ஜான் கானான் பள்ளி,மும்பை எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளிகளில் பயின்றவர்.நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் 2017ல் பட்டம் பெற்றார்.
தற்போது, அவர் என்கோர் ஹெல்த்கேரில் இயக்குநர் பதவி வகிக்கிறார்.
நிச்சயதார்த்தம் நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் இப்போதே திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
ராதிகா மெர்ச்சண்ட் பல்வேறு நிகழ்வுகளில் சில அழகான மற்றும் ஆடம்பரமான பைகளுடன் காணப்படுவார். இந்தப் பைகள் பார்க்க சிறியதாகத் தோன்றினாலும், நடுத்தர வர்க்க மக்களாகிய நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் விலை போனது.
அவரது கலெக்ஷனில் உள்ள ஆடம்பரமான பைகள்மற்றும் அவற்றின் விலைகள் இங்கே உள்ளன
Hermès Morphose Mini Bag
நிடா முகேஷ் அம்பானி கல்ட்சுரல் செண்டர் தொடக்க விழாவின் போது, ராதிகா இந்த பிரமிக்க வைக்கும் மினியேச்சர் பையுடன் தோன்றினார். செயின், ஸ்ட்ராப் மற்றும் க்ளோசெட்டுடன் வெள்ளி நிற மினி பேக் ₹2 கோடிக்கு விற்பனையாகிறது.
Hermès Kelly Pink Crocodile Leather Bag
2023 இல் நடந்த அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவின் கலெக்ஷன் வெளியீட்டு விழாவில் ராதிகா இந்த அழகான பையுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அவர் அதை ஒரு சில்வர் சீக்வின் எம்பெலிஷ்டு புடவையுடன் இணைத்தார். இந்த பையின் விலை சுமார் ₹1 கோடியே 64 லட்சம்.
The Lady Dior Bag
கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த தி டியோர் ஃபால் 2023 நிகழ்ச்சிக்காக தனது வெள்ளை நிற ஹால்டர்-நெக் கவுனுடன் பொருந்தக்கூடிய நீல நிற மினி கைப்பையுடன் சென்றார். இந்த பையின் விலை சுமார் ₹20லட்சத்து 92ஆயிரம் என கூறப்படுகிறது.
Judith Leiber’s Just For You Bow Bag
2023 இல் மணீஷ் மல்ஹோத்ராவின் தீபாவளி பார்டிக்காக, அவர் இந்த பையை தனது ஹெவி எம்ப்ராய்டரி செய்யப்பட்ட தந்தம்-நிறம் கொண்ட காக்ரா செட்டுடன் மேட்ச் செய்தார். இந்த பையின் விலை சுமார் ₹4,98,539.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.