பந்தனி முதல் கஷீதா வரை, பிச்வாய் முதல் ஜர்தோசி வரை அம்பானி திருமணம் உலகளவில் பேஷன் ஆர்வலர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது.
ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான திருமண விழாவிற்கு முன்னதாக, அவர்களது மும்பை இல்லத்தில் நடந்த சிவசக்தி பூஜை மற்றும் மெஹந்தி விழாவில் நீதா அம்பானி, டிசைனர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த தனித்துவமான பீகாக் எமரால்ட் கிரீன் தாராட் லெஹெங்காவில் அழகாக தோன்றினார்.
ஹேண்ட் எம்ப்ராய்டரி, மிரர் வொர்க், சோனி வேலைப்பாடுகளுடன் உன்னிப்பாக அலங்கரிக்கப்பட்ட இந்த லெஹெங்காவுக்கு, ராயல் ப்ளூ சாடின் சில்க் துப்பட்டா மற்றும் சில்வர் த்ரெட் வொர்க் கோல்டன் பிளவுஸ் மேலும் மெருகூட்டியது.
சந்தன் ஹார் ஆரம் லெஹங்காவின் பிரமாண்டத்தை முழுமையாக பூர்த்தி செய்தது.
அந்த் பெரிய குந்தன் வைரம் மற்றும் தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் வளையல்களுடன் உண்மையிலேயே கவனத்தை ஈர்த்தது. முன்னதாக இஷா அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் நீதா இந்த நகைகளை அணிந்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“